»   »  வர மறுத்த அனுஷ்கா!

வர மறுத்த அனுஷ்கா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Anuska
தமிழில் நடிக்க வந்த வாய்ப்பை வேண்டாம் என்று நிராகரித்து விட்டாராம் அனுஷ்கா.

சரண் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த வட்டாரம் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகவிருந்தவர் அனுஷ்கா. ஆனால் கடைசி நேரத்தில் அனுஷ்காவை நிராகரித்தார் சரண்.

இதனால் வருத்தத்தில் இருந்த அனுஷ்காவுக்கு ஆதரவு தரும் வகையில் சுந்தர்.சியின் ரெண்டு படத்தில் நடிக்க அழைக்கப்பட்டார் அனுஷ்கா. இப்படம் அவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.

அப்படத்தில் ரீமா சென்தான் நாயகி. அனுஷ்கா இரண்டாவது நாயகியாகத்தான் நடித்தார். இருந்தாலும் ரீமாவுக்கு சமமாக அனுஷ்காவும் பேசப்பட்டார்.

இப்படத்திற்குப் பின்னர் அனுஷ்கா தெலுங்குக்குப் போய் விட்டார். இப்போது தெலுங்கில் கை நிறைய வாய்ப்புகளுடன் பிசியாக உள்ளார் அனுஷ்கா.

இந்த நிலையில் சமீபத்தில் பயணிகள் கவனத்திற்கு என்ற புதுப் படத்தில் நாயகியாக நடிக்க அணுகினர். இப்படத்தின் நாயகன் ஜீவன்.

ஆனால் இப்படத்தை நிராகரித்து விட்டாராம் அனுஷ்கா. எனக்கு தமிழ் சரியான வாய்ப்புகள் தரவில்லை. அப்போது என்னை கை தூக்கி ஆதரவு கொடுத்தது தெலுங்குதான். தெலுங்கில் எனக்கு திருப்திகரமான அளவுக்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே தெலுங்கிலேயே தீவிர கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன். எனவே வேறு படத்தில் நடிக்க முடியாது என்று கூறி அனுப்பி விட்டாராம்.

இதைக் கேட்டு அப்செட் ஆகி திரும்பி வந்துள்ளனராம் பயணிகள் கவனத்திற்கு படத் தரப்பினர்.

மறுபடியும் தமிழைத் தேடி அனுஷ்கா வர நேரிடும். அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று கடுப்புடன் உள்ளனராம் தமிழ்த் திரையுலகினர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil