Ghaati First Review: ஆக்ரோஷ அனுஷ்கா.. காட்டி முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?
சென்னை: பிரபல இயக்குநர் க்ரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில், அனுஷ்கா ஷெட்டி மற்றும் சிவாஜி கணேசனின் பேரன் விக்ரம் பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த 'காட்டி' திரைப்படம், செப்டம்பர் 5, 2025 அன்று உலகளவில் வெளியாக உள்ளது.
இந்த ஆக்ஷன்-க்ரைம் படத்தை சிந்தகிந்தா ஸ்ரீனிவாஸ் கதை எழுத, ராஜீவ் ரெட்டி மற்றும் சாய் பாபு ஜகர்லமுடி இணைந்து தயாரித்துள்ளனர். ஃபர்ஸ்ட் ஃப்ரேம் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு, மனோஜ் ரெட்டி கட்டாசனி ஒளிப்பதிவு செய்ய, தூருப்பு சாணக்யா ரெட்டி மற்றும் நாகவெல்லி வித்யாசாகர் இசையமைத்துள்ளனர்.

இப்படத்தில் சைதன்யா ராவ் மடாடி, ஜகபதிபாபு, ஜிஷு சென்குப்தா, ஜான் விஜய், ரவீந்திர விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
'காட்டி’ ஒரு அதிரடி கமர்ஷியல் திரைப்படம். இதில் க்ரிஷின் தனித்துவமான ஸ்டைல் வெளிப்படும். அனுஷ்கா ஷெட்டியின் நடிப்பு உணர்வுபூர்வமாகவும், தீவிரமாகவும் இருக்கும். இது பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த திரையரங்கு அனுபவத்தை வழங்கும். டீசர், டிரெய்லரில் இருந்த தீவிரம் படம் முழுவதும் தென்படுகிறது” என்று சோஷியல் மீடியாவில் முதல்கட்ட விமர்சனங்கள் குவிந்துள்ளன.
2 மணி நேரம் 35 நிமிடங்கள் ஓடும் 'காட்டி' திரைப்படத்தின் முதல் பாதி உணர்வுபூர்வமான பயணமாகவும், இரண்டாம் பாதி சக்திவாய்ந்த அதிரடி டிராமாவாகவும் இருக்கும். இது அனுஷ்கா ஷெட்டிக்கும், இயக்குநர் க்ரிஷுக்கும் ஒரு கம்பேக் படமாக அமையும். மேலும், இப்படம் ஒரு சூப்பர் ஹிட்டாக தேவையான அத்தனை அம்சங்களையும் கொண்டுள்ளது என மற்றொரு விமர்சகர் தெரிவித்துள்ளார்.
'காட்டி’ திரைப்படத்தில் அனுஷ்கா ஷெட்டி 'ஷீலாவதி' என்ற கதாபாத்திரத்தில் உக்கிரமாக நடித்துள்ளார். விக்ரம் பிரபு, தெலுங்கு திரையுலகிற்கு முதல் முறையாக அறிமுகமானாலும், தனது நடிப்பால் கவனம் ஈர்த்துள்ளார். முதல் பாதி பரபரப்பான காட்சிகளுடன் நகர்கிறது. குறிப்பாக, ரயில் நிலைய சண்டைக் காட்சி பார்வையாளர்களை கட்டிப்போடும்.
இது ஒரு பாதிக்கப்பட்ட பெண் 'ஷீலாவதி' எவ்வாறு ஒரு குற்றவாளியாகவும், பின்னர் ஒரு 'லெஜெண்டாகவும்' மாறுகிறார் என்பதை விவரிக்கிறது என்று ஒரு விமர்சகர் கருத்து தெரிவித்துள்ளார்.
'காட்டி’ ஒரு அபவ் ஆவரேஜ் படம். முதல் மற்றும் இரண்டாம் பாதியில் உள்ள சில சீன்கள் மெதுவாக இருந்தாலும், அதிரடி காட்சிகள் மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். அனுஷ்கா ஷெட்டி, ஜகபதிபாபு, சைதன்யா ராவ், விக்ரம் பிரபு ஆகியோரின் நடிப்பு சிறப்பாக இருக்கும்” என மற்றொரு விமர்சகர் கூறியுள்ளார்.
“திரையரங்குகளில் புயலைக் கிளப்ப 'காட்டி' தயாராக உள்ளது. ஷீலாவதி கதாபாத்திரத்தில் அனுஷ்காவின் நடிப்பு அபாரமானது. வி.எஃப்.எக்ஸ் பணிகள் மிகச் சிறப்பாக உள்ளன. இது அனுஷ்காவின் சிறந்த நடிப்புகளில் ஒன்று. கதைக்களம் புத்துணர்ச்சியுடன் உள்ளது.
பட்ஜெட் கட்டுப்பாடுகள் காரணமாக சில தொழில்நுட்ப குறைபாடுகள் இருந்தாலும், அனுஷ்காவின் முந்தைய படங்களை விட இது ஒரு சிறந்த படம்” என்று ஒரு விமர்சகர் தனது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். அனுஷ்காவுக்கு சரியான கம்பேக் படமாக காட்டி அமையும் என்கின்றனர்.
விக்ரம் பிரபு நடித்து தமிழில் வெளியான லவ் மேரேஜ் படம் அவருக்கு சரியாக போகாத நிலையில், காட்டி படமாவது கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கல்யாணி பிரியதர்ஷன் அசால்ட்டாக 101 கோடிக்கும் அதிகமான வசூலை லோகா படத்தின் மூலம் அடைந்துள்ள நிலையில், அனுஷ்கா தான் யார் என்பதை மீண்டும் நிரூபிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











