"கையிலே ஆகாசம்" கவர் சாங்.. சொந்த குரலில் பாடிய அபர்ணா பாலமுரளி!
சென்னை : சூரரைப் போற்று வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக உள்ளார் நடிகை அபர்ணா பாலமுரளி.
இப்பொழுது அசோக் செல்வனுக்கு ஜோடியாக புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
நடிகையாக மட்டுமல்லாமல் பிரபலமான பாடகியாகவும் அபர்ணா பாலமுரளி இருக்க இப்பொழுது சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்ற கையிலே ஆகாசம் பாடலை சொந்த குரலில் பாடி வெளியிட்டுள்ளார்.

கதாநாயகியாக
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று தமிழ் சினிமாவில் வெளியான சிறந்த படைப்புகளில் ஒன்றாக போற்றப்படுகிறது. இதில் கதாநாயகியாக நடித்து அனைவரது மனங்களையும் கொள்ளை கொண்டவர் நடிகை அபர்ணா பாலமுரளி.

சூர்யாவுடன்
மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் "8 தோட்டாக்கள்" படத்தின் மூலம் அறிமுகமானார் அதைத் தொடர்ந்து ஜிவி பிரகாஷின் சர்வம் தாளமயம், தீதும் நன்றும் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். தமிழ் சினிமாவில் அறிமுகமான ஒரு சில திரைப்படங்களிலேயே சூர்யாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்க அதில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

புதிய திரைப்படத்தில்
சூரரைப் போற்று வெளியான பிறகு சூர்யாவுக்கு இணையாக அபர்ணா பாலமுரளியின் பொம்மி கதாபாத்திரமும் ரசிகர்களால் பெருமளவு கொண்டாடப்பட்டது. அடுத்தடுத்து தேர்ந்தெடுக்கும் கதைகளில் மிக கவனமாக இருந்து வருகிறார். அந்த வகையில் இப்பொழுது நடிகர் அசோக்செல்வன் உடன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதேசமயம் மலையாளத்தில் ஆடுஜீவிதம் மற்றும் உலா ஆகிய படங்களில் இப்போது நடித்து வருகிறார்.

நல்ல பாடகி
நடிகையாக மட்டுமல்லாமல் மிகச்சிறந்த பாடகியாகவும் உள்ள அபர்ணா பாலமுரளி தனது முதல் படமான 8 தோட்டாக்களிலேயே மன்னிப்பாயா என கேட்காதே என்ற பாடலைப் பாடியிருந்தார். இந்த நிலையில் சூரரைப் போற்று படத்தில் இடம்பெறும் "கையிலே ஆகாசம்" பாடலை தனது சொந்த குரலில் பாடி கவர் பாடலாக அதை வெளியிட்டும் உள்ளார். தான் கதாநாயகியாக நடித்த அதே படத்தில் மனதை உருக்கும் பாடலை அபர்ணா பாலமுரளி பாடி வெளியிட்டுள்ளதை ரசிகர்கள் ரசித்து பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











