»   »  என்னுள் இருக்கும் 'ஸ்பார்க்'கை பார்த்து வாய்ப்பு கொடுத்தார் முருகதாஸ்: லேடி ரஜினி

என்னுள் இருக்கும் 'ஸ்பார்க்'கை பார்த்து வாய்ப்பு கொடுத்தார் முருகதாஸ்: லேடி ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தன்னுள் இருக்கும் ஸ்பார்க்கை பார்த்து தான் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் அகிரா படத்தில் நடிக்க வைத்துள்ளார் என பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சோனாக்ஷி சின்ஹா மிகவும் துணிச்சலான அடிதடி பார்ட்டியாக நடித்துள்ள இந்தி படம் அகிரா. மவுன குரு படத்தின் இந்தி ரீமேக்கான அகிரா நாளை ரிலீஸாக உள்ளது. படத்தின் போஸ்டர்களிலேயே சோனாக்ஷி மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் படம் குறித்து சோனா கூறுகையில்,

ஹீரோயின்

ஹீரோயின்

ஏ.ஆர். முருகதாஸ் முதன்முதலாக ஹீரோயினை மையமாக வைத்து படம் எடுத்துள்ளார். அந்த படத்தில் நான் ஹீரோயினாக நடித்துள்ளது மிகவும் பெருமையாக உள்ளது.

சரியான நேரம்

சரியான நேரம்

அகிரா படத்திற்காக நான் கடுமையாக உழைத்துள்ளேன். இது போன்ற ஒரு படம் கிடைக்காதா என்று எதிர்பார்த்தபோது சரியான நேரத்தில் என்னை தேடி அகிரா வாய்ப்பு வந்தது.

ஸ்பார்க்

ஸ்பார்க்

நான் முருகதாஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார் ஜோடியாக ஹாலிடே படத்தில் நடத்தபோது அகிரா ஷர்மா கதாபாத்திரத்திற்கு நான் தான் பொருத்தமாக இருப்பேன் என்றார் அவர். என்னுள் இருக்கும் ஸ்பார்க்கை பார்த்து தான் அகிராவில் நடிக்க வைத்துள்ளார்.

முருகதாஸ்

முருகதாஸ்

நாட்டின் டாப் ஆக்ஷன் ஸ்டார்களை இயக்கியவர் முருகதாஸ். அப்படிப்பட்டவர் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. அகிரா கதாபாத்திரம் மிகவும் சவாலானது.

English summary
Sonakshi Sinha will be seen packing punches and doing hardcore action sequences in her upcoming "Akira" and the actress says the film came at the right time in her career as she wanted to push her limits as a performer. Murugadoss sir, who saw the spark in me to cast in 'Akira', she said.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil