»   »  ஆ..ஆ ஆ.. ஆஷின்

ஆ..ஆ ஆ.. ஆஷின்

Subscribe to Oneindia Tamil

தலைப்பைப் பார்த்தால் பயமாக இருக்கிறதா?. ஆஷினின் சொந்த ஊருக்குப் போய்விட்டு வந்தவர்கள் இப்படித்தான் கண்கள் விரிய,வாயை பிளக்கிறார்கள். காரணமும் இருக்கு.

இந்த ஆஷின் இருக்கிறாரே, நாம் டிவி, டேப் ரெக்கார்டர் வைத்திருப்பது போல சொந்தமா ஒரு அணைக் கட்டேவைத்திருக்கிறாராம்.

நடிகைகள் பேட்டி கொடுக்கும்போது, என்கு சின்மாலே அவ்ளோ இன்ரஸ்ட் கிட்யாது. அவ்ளோ பெரிய டைரக்டர் கூப்டார்.அத்னால சும்மா ஒரு ஹாபிக்காகத் நடிக்க வந்தேன் என்றோ, அல்லது எங்கப்பா பெரிய லாடு லபக்கு தாசு என்ற ரேஞ்சுக்கோபேசுவார்கள்.

நிஜத்தில் தேங்கா முடி இயக்குனர்களிடம் சான்ஸ் கேட்டு அலையோ அலையோ என்று அலைந்திருப்பார்கள். ஆனால் ஆஷின், நான்ஹாபிக்காகத் தான் நடிக்க வந்தேன் என்று சொன்னால் நம் நம்பித் தான் வேண்டும்.

ஏனென்றால் அம்மணி அம்மாம் பெரிய துட்டு பார்ட்டி. கேரளத்துப் பெண்ணான இவர், உண்மையிலேயே மாபெரும் பணக்காரக்குடும்பத்தில் பிறந்தவர். கேரளாவில் வாகை மண் என்ற இடத்தில், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நிலத்தை வளைத்துப்போட்டிருக்கிறது ஆஷினின் குடும்பம். எல்லாம் பரம்பரை நிலமாம். தங்கள் நிலங்களுக்கு பாசன வசதிக்காக சொந்தமாகஅணையே கட்டி இருக்கிறார்கள்.

ரப்பர், ஏலக்காய் என எல்லாம் பணம் காய்ச்சி பயிர்களைப் பயிரிட்டு வருகிறார்கள். இவர்களின் நிலங்களுக்குள் பல கிராமங்களும்அடக்கமாம்.

இவ்வளவு பெரும் குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் ஆஷினிடம் துளியும் பந்தா இல்லை. ஓவர் ஆபாசமாகக் காட்டக் கூடாதுஎன்ற ஒரே ஒரு தளர்த்தத்தக்க நிபந்தனையைத் தவிர, வேறு எந்த தொந்தரவும் கொடுப்பதில்லையாம்.

குறித்த நேரத்துக்கு சூட்டிங்குக்கு வந்துவிடுவது உள்பட ஒரு பயம் கலந்த புதுமுகத்தின் அனைத்து அம்சங்களும்ஆஷினிடம் அடக்கம். தனது வசதி விவரங்கள் இவராக வெளியில் சொன்னதில்லை என்பது இன்னெருமுக்கியமான விஷயம்.

இவர் கதாநாயகியாக நடிக்கும் எம்.குமரன், சன் ஆப் மகாலட்சுமி படத்தின் இயக்குனர் ராஜா, மிரட்டல் படத்தின்இயக்குநர் ரமணா, சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தின் இயக்குனர் கெளதம் ஆகிய மூவரும் சொல்லிவைத்தாற்போல் ஆஷினுக்கு க்ளீன் சர்டிபிகேட் தருகிறார்கள்.

மிரட்டலில் அஜீத்துடனும், சென்னையில் ஒரு மழைக்காலத்தில் சூர்யாவுடனும், மகாலட்சுமியின் ரவியுடனும்நடிக்கும் ஆஷின் தெலுங்கிலும் ஓவர் பிஸி. சென்னைக்கும் ஹைதராபாத்துக்குமாக பறந்து, பறந்து நடித்துக்கொண்டிருக்கும் ஆஷின் என்ன தான் பணக்காரராக இருந்தாலும் சம்பள விஷயத்தில் அட்ஜெஸ்ட்மெண்ட் எதுவும்செய்வதில்லையாம்.

ஜோதிகா, த்ரிஷாவுக்கு அடுத்தபடியாக மிக அதிகமாக சம்பளம் கேட்கிறார் (சுமார் ரூ. 35 லட்சம்). ஏன் இவ்வளவுகேட்கிறீர்கள் என்று ஆஷினிடம் கேட்டால்,

நான் எந்த இயக்குனரையும் , தயாரிப்பாளரையும் தேடிப் போய் சான்ஸ் கேட்பதில்லை. என்னிடம் அழகும்,திறமையும் இருக்கிறது என்று தேடி வருகிறார்கள். நான் கேட்கும் பணத்தை எந்த மறுப்பும் இன்றி தருகிறார்கள்.ஒப்புக் கொண்ட பின்பு, சூட்டிங்கில் ஏதும் பிரச்சினை பண்ணுகிறேனா?, இல்லையே.

அப்படி பண்ணுகிற பொண்ணாயிருந்தால், தமிழிலும், தெலுங்கிலும் ஒரே நேரத்தில் இத்தனைப் படங்களைப்நடிக்க முடியாது என்று சாமர்த்தியமாக பதில் தருகிறார்.

தெலுங்கில் பிஸியாக இருக்கும் ஆசினுக்கு

இவருக்குத் தாய்மொழி மலையாளம் என்றாலும், தமிழில் சரளமாகப் பேசுகிறார். இதைப் பார்த்த இயக்குநர் ராஜா,எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் சொந்தக் குரலில் டப்பிக் பேச வைக்கு முடிவு செய்துள்ளார்.

கதைப்படி இவர் மலையாளம் கலந்த தமிழ் பேச வேண்டுமாம். அதற்கு ஏற்ற வகையில் ஆஷினின் வாய்ஸ்உள்ளதால், இவரே டப்பிக் பேசப் போகிறார். தான் நடித்து வெளிவரும் முதல் தமிழ் படத்திலேயே சொந்தக்குரலில் பேச வாய்ப்புக் கிடைத்ததை சந்தோஷமாகக் கூறுகிறார்.

எல்லாம் சரிதான், நீங்க தமிழில் முதலில் ஒப்புக் கொண்ட உள்ளம் கேட்குமே (ஹீரோ ஷாம்) படம், அடுத்தஒலிம்பிக் போட்டிக்குள்ளேயாவது வந்துருமா?

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil