»   »  பாவனாவின் பாலிஸி!

பாவனாவின் பாலிஸி!

Subscribe to Oneindia Tamil
வேகமாக வளர்ந்து வரும் பாவனா சில ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்களை தனக்குத் தானே வகுத்துக் கொண்டுள்ளாராம்.அதிலிருந்து கொஞ்சம் கூட விலகுவதில்லையாம்.

ஓவர் கிளாமர் காட்டுவது கிடையாது, ஆபாசமான, இரட்டை அர்த்தம் தொணிக்கக் கூடிய வசனங்களை பேசுவது கிடையாது,தன்னைப் பற்றி தாறுமான வதந்திகள் வரும் அளவுக்கு நடந்து கொள்ளக் கூடாது என்று இந்த கோட் ஆப் காண்டக்ட் பட்டியல்ரொம்ப நீளமானது.

அந்த வகையில் விளம்பரப் படங்களில் நடிக்கக் கூடாது என்பதையும் ஒரு பாலிசியாகவே வைத்துள்ளாராம் பாவனா. தொழில்ரீதியிலும், தோற்ற ரீதியிலும் பாவனாவின் வளர்ச்சியைப் பார்த்துப் பிரமித்த சில நிறுவனங்கள், தங்களது தயாரிப்புகளைபிரபலப்படுத்தும் விளம்பரப் படங்களில் நடிக்க வேண்டும் என்று பாவனாவை அணுகினவாம்.

ஆனால் பாவனா ஸாரி சொல்லி விட்டாராம். சினிமாவே இப்போதைக்குப் போதும். தேவையில்லாமல் விளம்பரப் படங்களில்நடித்து, அதிக பப்ளிசிட்டி ஆவதை நான் விரும்பவில்லை. அப்புறம் பார்க்கலாம் என்று கூறி விட்டாராம் பாவனா.இப்போதைக்கு நல்ல நல்ல படங்கள் செய்ய வேண்டும். நல்ல நடிகை என்ற பெயரை வாங்க வேண்டும், அதெல்லாம ஆனபின்னர்தான் விளம்பரங்களில் நடிப்பது பற்றி யோசிப்பேன் என்கிறார் பாவனா.

பாவனா இப்படிக் கூறினாலும் மறுபக்கம் அசின், சினிமாவை விட விளம்பரங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம்கொடுக்கிறார். அவர் பாட்டுக்கு சகட்டு மேனிக்கு ஏகப்பட்ட விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார்.

அதற்காக குப்பையான கம்பெனிகளின் படங்களில் அவர் நடிப்பதில்லை. தரமான பொருட்களுக்கு மட்டுமே அவர் விளம்பரம்செய்ய ஒப்புக் கொள்வாராம்.

பாவனாவின் கொள்கை சூப்பராக இருந்தாலும் அவரிடம் ஒரு ஹிட்டன் அஜென்டாவும் இருக்கிறதாம். அதாவது நல்லநடிகை, ஷூட்டிங்குக்கு சொன்ன நேரத்தில் வருவார் என்று பாவனாவை இயக்குநர்கள் புகழ்ந்தாலும், பட விழாக்களுக்கு படுதாமதமாக வருகிறார் என்ற புலம்பித் தீர்க்கிறார்கள்.

சமீபத்தில் நான் கடவுள் படத்தின் செய்தியாளர் சந்திப்புக்கு இயக்குநர் பாலா ஏற்பாடு செய்திருந்தார். குறித்த நேரத்தில் பாலா,தயாரிப்பாளர் தேனப்பன், ஹீரோ ஆர்யா உள்ளிட்ட அத்தனை பேரும் ஆஜராகி விட்டனர். ஆனால் பாவனாவைக்காணவில்லை. அவருக்காக சிறிது நேரம் காத்திருந்தார்கள். பின்னர் பொறுமை இழந்து பிரஸ் மீட்டை ஆரம்பித்தார் பாலா.

பிரஸ் மீட் முடியப் போகும் நேரத்தில்தான் வந்தார் பாவனா. இதேபோல லிங்குச்சாமியின் தயாரிப்பில் உருவாகும் தீபாவளிபடம் தொடர்பான செய்தியாளர் சந்திப்புக்கும் கடைசி நேரத்தில்தான் வந்தார் பாவனா. பட விழாக்களுக்கும் இப்படித்தான்கடைசியல் போவதை வழக்கமாக வைத்துள்ளாராம் பாவனா.

அது சரி, நடிக்க பணம் கொடுக்கிறார்கள், கரெக்ட் டைக்கு போனால் தான் நல்லது. பட விழாக்களுக்கு போனால் என்னகிடைக்கும், மேக்ஸிமம் ஒரு கூல் டிரிங்ஸ் கிடைக்கும். அதுதான் லேட்டாக போகிறார் போல!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil