அரபிக் குத்து பாட்டுக்கு அபர்ணா தாஸ் போட்ட டான்ஸ்.. இன்ஸ்டாகிராமில் சும்மா ஹார்ட்டின்களை அள்ளுது!

சென்னை: பீஸ்ட் ஃபர்ஸ்ட் சிங்கிள் அரபிக் குத்து பாட்டுக்கு நடிகை அபர்ணா தாஸ் போட்டுள்ள நடன வீடியோ இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி வருகிறது.

Recommended Video

அரபிக் குத்து பாட்டுக்கு அபர்ணா தாஸ் போட்ட டான்ஸ்.. இன்ஸ்டாகிராமில் சும்மா ஹார்ட்டின்களை அள்ளுது!

மலையாள நடிகையான அபர்ணா தாஸ் பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பீஸ்ட் படத்தின் படபூஜையில் பூஜா ஹெக்டே கலந்து கொள்ளாத நிலையில், இவர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

பீஸ்ட் பூஜையில்

பீஸ்ட் பூஜையில்

சென்னையில் உள்ள சன் ஸ்டூடியோவில் எளிமையான முறையில் போடப்பட்ட பீஸ்ட் படத்தின் துவக்க விழா பூஜையில் மலையாள நடிகை அபர்ணா தாஸ் கலந்து கொண்டார். யாருடா அந்த மஞ்ச கலரு சுடிதார் என நெட்டிசன்கள் பீஸ்ட் பூஜை புகைப்படங்கள் வெளியானதும் ஜூம் செய்து தேடத் தொடங்கினர். அபர்ணா தாஸின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென ஏகப்பட்ட தளபதி ரசிகர்கள் ஃபாலோயர்களாக மாறினர்.

100வது நாள் போட்டோவிலும்

100வது நாள் போட்டோவிலும்

அதுமட்டுமின்றி இயக்குநர் நெல்சன் வெளியிட்ட 100வது நாள் ஷூட்டிங் புகைப்படத்திலும், பூஜா ஹெக்டேவை ஓவர்டேக் செய்து விட்டு இளைஞர்களின் கண்களை கவர்ந்தது அபர்ணா தாஸ் தான். மலையாளத்தில் 2018ல் வெளியான நியான் பிரகாஷன் மற்றும் 2019ல் வெளியான மனோஹரம் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

நீச்சல் குள புகைப்படங்கள்

நீச்சல் குள புகைப்படங்கள்

பீஸ்ட் படத்தின் ஷூட்டிங்கில் இருந்து ஓய்வு கிடைத்த நிலையில், நீச்சல் குளத்தில் எடுத்த படு ஹாட்டான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு தளபதி ரசிகர்களின் லைக்குகளை அள்ளிக் குவித்த அபர்ணா தாஸ் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் அட்டகாசமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

கையில் ரோஜாவுடன்

கையில் ரோஜாவுடன்

காதலர் தினத்துக்கு கையில் ரோஜாவுடன் "Be my valentine? let's always celebrate love. Might delete later." எனும் கேப்ஷனை கொடுத்து தனது ரசிகர்களை திக்குமுக்காட செய்திருந்தார் நடிகை அபர்ணா தாஸ். பீஸ்ட் படத்தில் இவர் என்ன ரோலில் நடித்துள்ளார் என்பதை அறிந்து கொள்ள இவரது ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

அபர்ணா தாஸின் அரபிக் குத்து

அபர்ணா தாஸின் அரபிக் குத்து

பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான அரபிக் குத்து காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில், பல பிரபலங்கள் அந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், தனது தோழியுடன் இணைந்து அபர்ணா தாஸ் போட்டுள்ள செம குத்தாட்ட வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

கடலில் குத்தாட்டம்

கடலில் குத்தாட்டம்

அரபிக் குத்து லிரிக் வீடியோவில் நடிகர் விஜய்யுடன் கவர்ச்சி உடையில் அந்த ஆட்டம் போட்ட பூஜா ஹெக்டே நடுக்கடலில் சொகுசு படலில் சென்றபடி தனியாக அந்த பாடலுக்கு நடனமாடும் ஒரு வீடியோவையும் ஷேர் செய்து அந்த அரபிக் குத்து பாடலை புரமோட் செய்திருந்தார். இந்நிலையில், பீஸ்ட் படத்தில் நடித்துள்ள இன்னொரு நடிகை அபர்ணா தாஸும் அந்த பாடலுக்கு நடனமாடியிருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், பல பிரபலங்களும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X