»   »  படிப்பை விடும் பானு!

படிப்பை விடும் பானு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு வழியாக நடிப்புக் களத்தில் தீவிரமாக குதிக்கத் தீர்மானித்து விட்டார் பானு. இன்னும் 2 மாதங்களில் பத்தாவது வகுப்பு பரீட்சையை முடித்து விட்டு தீவிரமாக நடிக்கப் போகிறாராம்.

மலையாளத்தில் முக்தா என்ற பெயரிலும், தமிழில் பானு என்ற பெயரிலும் அறியப்படும், தாமிரபரணி நாயகி பானு, இப்போது தமிழில் நடிப்பதில்லை. ஆனால் மலையாளப் படம் என்றால் மட்டும் பச்சைக் கொடி காட்டுகிறாராம்.

தாமிரபரணிக்குப் பிறகு அவரைத் தேடி நிறைய படங்கள் வந்தன. ஆனால் எனக்கு படிப்புதான் முக்கியம், நான் படிப்பை தொடரப் போகிறேன், அப்புறம் பார்க்கலாம் என்று தன்னைத் தேடி வந்த தமிழ் தயாரிப்பாளர்களை விரட்டி விட்டு விட்டார் பானு.

ஆனால் இப்போது மலையாளத்தில் மம்முட்டி நடிக்கும் நஸ்ரனி படத்தில் மட்டும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இப்போது பத்தாவது வகுப்பை பிரைவேட்டாக படித்துக் கொண்டிருக்கிறார் பானு.

இன்னும் 2 மாதங்களில் அவருக்கு பரீட்சை வருகிறதாம். அதை முடித்த பின்னர் படிப்புக்கு விடை கொடுக்கப் போகிறாராம். முழு மூச்சில் நடிப்புக்கு வருகிறாராம்.

வெயில் காயும்போதே வைக்கோலை காயப் போடு என்பது பழமொழி. இன்னும் தெளிவாகச் சொல்வதானால் காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்பார்கள்.

அதற்கேற்ப தனக்கு நல்ல டிமாண்ட் உள்ள நிலையில் அதை வீணடிக்க விரும்பாத பானு, பரீட்சைக்குப் பிறகு நடிக்க ரெடி என்று கூறி தமிழ் மற்றும் கன்னடத்தில் 4, மலையாளத்தில் 3 படங்களை ஒப்புக் கொண்டுள்ளாராம்.

ரொம்ப சந்தோஷம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil