»   »  தங்கச்சி நடித்த விவேகம் ரிலீஸ்: அக்கா ஸ்ருதி ஹாஸன் எங்கே?

தங்கச்சி நடித்த விவேகம் ரிலீஸ்: அக்கா ஸ்ருதி ஹாஸன் எங்கே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கை அக்ஷரா ஹாஸன் கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ள விவேகம் படம் இன்று ரிலீஸாகியுள்ள நிலையில் அக்கா ஸ்ருதி ஹாஸன் எங்கிருக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஸ்ருதி ஹாஸனை அடுத்து தங்கை அக்ஷரா ஹாஸன் கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். அவர் நடித்துள்ள விவேகம் படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

படத்தை இன்றே அக்ஷராவுடன் பார்ப்பதாக கமல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் விஜய்-வீடியோ
ஸ்ருதி

ஸ்ருதி

அப்பாவும், அக்ஷராவும் தியேட்டேருக்கு போகிறார்கள். அக்கா ஸ்ருதி எங்கே என்று கேள்வி எழுந்துள்ளது. ஸ்ருதி நாட்டிலேயே இல்லை அவர் லண்டனில் உள்ளார்.

லண்டன்

லண்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதை ஸ்ருதி ஹாஸனே புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். ஸ்ருதி லண்டனை சேர்ந்த நாடக நடிகரை காதலிக்கிறார் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்து

லண்டனில் இருந்தாலும் ஸ்ருதி தனது தங்கையை வாழ்த்த தவறவில்லை. விவேகம் படக்குழுவுக்கு அவர் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அக்ஷரா

அக்ஷரா

அக்ஷராவின் இன்ட்ரோ சீன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவரின் நடிப்பை பார்த்தவர்கள் புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்று தெரிவித்துள்ளனர்.

English summary
While Akshara Haasan's debut tamil movie hit the screens on wednesday, elder sister Shruti is in London.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil