தந்தையானார் பிக் பாஸ் பிரதீப் ஆண்டனி.. என்ன குழந்தை தெரியமா?

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதீப் ஆண்டனியின் காதல் மனைவி பூஜா கர்ப்பமாக இருந்த நிலையில் தற்போது குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் கலந்து கொண்ட பிரதீப் ஆண்டனியை பற்றி ஒவ்வொரு சீசன் ஒளிபரப்பாகும் போதும், பார்வையாளர்களும், போட்டியாளர்களும் கட்டாயம் பேசுவார்கள். ஏன் என்றால் அந்த சீசனில் பிரதீப் ஆண்டனியால், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இதை பார்வையாளர்கள் கடுமையாக கண்டித்தனர்.
இது ஒரு தலைபட்சமான முடிவு, என்று சீசன் 7ல் நடுவராக இருந்த கமல்ஹாசனை பலரும் கண்டித்து ட்ரோல் செய்தனர்.

Bigg Boss Pradeep antony baby
Photo Credit:

பிரதீப் ஆண்டனி: ஒரு கட்டத்தில் இணையத்தில் பலரும் கமலை வரம்புமீறி திட்டியதால், இதுபற்றி நிகழ்ச்சியில் பேசிய கமல், பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கொடுத்தது நான் இல்லை, வீட்டில் இருப்பவர்கள் தான் ஓட்டுபோட்டு ரெட் கார்ட் கொடுத்தார்கள் என்பதை விளக்கினார். மேலும், சீசன் 7க்கு பிறகு கமல் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார். இதை எல்லாம் பிரதீப் ஆண்டனி பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனது வேலையில் கவனத்தை செலுத்திவந்தார். இதையடுத்து, பூஜா என்பவரை காதலித்து கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இரு வீட்டார் சம்மதத்துடன் நடந்த இந்த திருமணத்தில் நண்பர்கள் மற்றும் பிக் பாஸ் சுரேஷ் தாத்தா ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

தந்தையானார்: இதைடுத்து, பூஜா கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை கடந்த மாதம் பிரதீப் ஆண்டனி வெளியிட்டு இருந்தார். மேலும், பூஜாவுக்கு வளைகாப்பு நடத்திய போட்டோவையும் அவர் ஷேர் செய்து இருந்தார். பூஜா, பிரதீப் ஆண்டனி தம்பதிகளுக்கு
சுகப்பிரசவம் ஆகட்டும். ரொம்ப சந்தோஷம் என அனைவரும் வாழ்த்திய நிலையில் தற்போது பூஜைவிற்கு சற்று முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை பிரதீப் ஆண்டனி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X