Don't Miss!
- News
ஆர்எஸ்எஸ், பாஜகவை உளவுபார்க்க.. ரிப்போர்டர்களை நியமிக்கும் பிஎப்ஐ? என்ஐஏ வைத்த 'ஷாக்' புகார்
- Lifestyle
வாய் துர்நாற்றத்திற்கு குட்-பை சொல்லணுமா? இதோ அதை தடுக்கும் சில இயற்கை வழிகள்!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Technology
விஷத்தை வெளியேற்றுகிறதா வாட்டர் ஹீட்டர்கள்? பகீர் நிகழ்வால் மக்கள் பீதி.! உண்மை என்ன?
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
தந்தையின் ஆசையை நிறைவேற்றிய பிக்பாஸ் பிரபலம்… வாழ்த்திய ரசிகாஸ் !
சென்னை : தந்தையின் கனவை நிறைவேற்றிய சாக்ஷி அகர்வாலுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மாடலிங் அழகியான சாக்ஷி அகர்வால், இதுவரை 100க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார்.
ராஜா ராணி, காலா, விஷ்வாசம் போன்ற திரைப்படங்களில் சிறு கேரக்டரில் நடித்து வந்த சாக்ஷி, தற்போது, பிரபுதேவாவுடன் பகீரா, சமுத்திரக்கனியுடன் நான் கடவுள் இல்லை, தி நைட் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
அஸ்வின் குமாரின் புதிய படம் முதல் ஹே சினாமிகா ரிலீஸ் வரை.. பிகே டாப் 5 பீட்ஸ்!

சாக்ஷி அகர்வால்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். அந்த நிகழ்ச்சியில் எந்த நேரதும் கவினுடன் ஒட்டி உரசி கடலை போட்டுக்கொண்டே இருந்ததால், ரசிகர்களால் பெருமளவு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.

சோஷியல் மீடியால் ஆக்டிவாக
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். எந்நேரமும் ஒர்க் அவுட், கவர்ச்சி புகைப்படம் என இன்ஸ்டவாசிகளை தன் கட்டுக்குள் வைத்திருக்கிறார் சாக்ஷி அகர்வால். இவர் பதிவிடும் புகைப்படத்திற்கு லைக்குகள் சும்மா பிச்சிக்கிட்டு போகும்.

தந்தையின் ஆசை
இந்நிலையிலை, நடிகை சாக்ஷி அகர்வால் சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். காருடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் நேற்று மிகப்பெரிய அளவில் வைரலானது. இதுகுறித்து சாக்ஷி அவர்கள் கூறியிருப்பது, சொகுசு கார் வாங்க வேண்டும் என்பது தந்தையின் நீண்ட நாள் ஆசைஅந்த கனவை தற்போது நிறைவேறி இருக்கிறது. மெர்சிடிஸ்-பென்ஸ் இ வகுப்பு காரினை நான் வாங்கியுள்ளேன். இது என்னுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம் என கூறியுள்ளார். தந்தையின் கனவை நிறைவேற்றிய ராக்ஷிக்கு பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர். சாக்ஷி வாங்கிய காரின் விலை 65 லட்சம் முதல் 83 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

சொகுசுகார்களை வாங்கும் பிரபலங்கள்
திரைப்பிரபலங்களுக்கு சொகுசு கார் வாங்குவது அதிகரித்துள்ளது வருகிறது. பிக் பாஸ் பிரபலம் ஷிவானி நாராணயன் BMW 7 Series காரை சமீபத்தில் வாங்கினார். அதேபோல, விஜய் டிவி தொகுப்பாளி மணிமேகலையும் BMW காரை வாங்கினார். தாடி பாலாஜியும் சிவப்பு நிற BMW கார் வாங்கி இருந்தார். விஜய் பிரபலங்கள் மட்டுமே தொடர்ந்து சொகுகார்களை வாங்குகிறார். அவ்வளவு சம்பளம் வருது போல.