»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கன்னட நடிகையான சைத்ரா மீண்டும் தமிழுக்கு வருகிறார்.

தமிழில் ஏற்கனவே வெல்டன் என்ற படத்தில் ஜெயந்த் என்ற புதுமுகத்துக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், படம்போணியாகவில்லை.

இதையடுத்து பெங்களூருக்கே திரும்பிப் போய்விட்ட அவரை ஹீரோயினாக்குவதாகச் சொல்லி சென்னைக்குவரவழைத்தார் குருவான இயக்குனர்.

சென்னைக்கு வந்த சைத்ரா ஒரு ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டுத் தங்கியிருக்க, இரவு நேரத்தில்டிஸ்கஷனுக்காக என்று சொல்லிக் கொண்டு இயக்குனர் புல் மப்பில் ரூமுக்குள் நுழைய, அவரது நோக்கத்தைஉணர்ந்த சைத்ரா கெட்ட வார்த்தைகளால் திட்டி வெளியே விரட்டிவிட்டார். அதே கோபத்தோடு இனி கோடம்பாக்கமே வேண்டாம் என்று வசைபாடிவிட்டு பெங்களூருக்குத் திரும்பினார்.அப்புறம் இந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை.

இப்போது கன்னடத்தில் இவருக்கு நோ-சான்ஸ். வீட்டில் சும்மா உட்கார்ந்து நகத்தைக் கடித்து, விரலையும் கடித்துக்கொண்டிருந்தவருக்கு மீண்டும் தமிழ் சான்ஸ் கதவைத் தட்ட தனது பழைய கோபத்தையெல்லாம் மூட்டைகட்டிவிட்டு கிளம்பி வந்திருகிறார்.

இவர் நடித்து வரும் அந்தப் படத்தின் பெயர் தரணி. மைக்கேல் ராஜ் இயக்கும் இந்தப் படத்தில் புதுமுகம் சீனுஹீரோவாக அறிமுகமாகிறார். ஆந்திராவைச் சேர்ந்தவராம் இந்த சீனு. பாத்திமா பாபு உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தின் சூட்டிங் கேரளா, அந்தமான், ஊட்டி என கண்களைக்கொள்ளை கொள்ளும் லோகேஷன்களில் நடந்து கொண்டிருக்கிறது.

முக்கோண காதல் கதையாம். சைத்ரா நீங்க கோடம்பாக்கம் வந்திருப்பது குருவான இயக்குனருக்குத் தெரியுமா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil