»   »  ஒன் மோர் பேய் வருது.. இது சார்மியின் மந்த்ரா 2!

ஒன் மோர் பேய் வருது.. இது சார்மியின் மந்த்ரா 2!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சார்மி நடித்து வெளியான 'மந்த்ரா' படம் ஆந்திராவில் அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. தமிழிலும் இந்தப் படம் டப் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து மந்த்ரா படத்தின் இரண்டாம் பாகமாக 'மந்த்ரா - 2' படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தை எஸ்எஸ்எஸ் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.சுந்தரம் தயாரிக்கிறார்.

சார்மி

சார்மி

கதாநாயகனாக கருங்காலி படத்தில் நடித்த சீனிவாஸ் நடிக்கிறார். நாயகியாக சார்மி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் தணிகலபரணி நடிக்கிறார்.

கதை

கதை

சொத்துக்காக ஆசைப்பட்டு அண்ணன் குடும்பத்தையே கொலை செய்கிறான் தம்பி. அதிலிருந்து தப்பித்து விடுகிற சார்மியின் உடம்பில் அவளது அப்பாவின் ஆவி புகுந்து கொண்டு அவளை காப்பாற்றுவதுடன் அந்த அக்கிரமங்களுக்குக் காரணமான தம்பியை எப்படி பழி வாங்குகிறது என்பதே மந்த்ரா - 2 படத்தின் கதை!

எஸ் வி சதீஷ்

எஸ் வி சதீஷ்

இந்தப் படத்தை எஸ் வி சுனில் இயக்குகிறார். அமுல் வசனமெழுத, சுனில் காஷ்யப் இசையமைக்கிறார்.

திகில்

திகில்

மந்த்ரா முதல் பாகம் த்ரில்லராக உருவாகியிருந்தது. இந்த இரண்டாம் பாகத்தை தெலுங்கு, தமிழ் ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் திகில் படமாக உருவாகி வருகிறது.

Read more about: charmi, சார்மி
English summary
Charmi starrer Manthra 2 is a horror movie which is going to release simultaneously in Tamil and Telugu.
Please Wait while comments are loading...