»   »  தன் முடியை கத்தரித்து கேன்சரால் பாதிக்கப்பட்ட 2 ரசிகைகளுக்கு ‘விக்’ செய்து கொடுத்த சார்மி!

தன் முடியை கத்தரித்து கேன்சரால் பாதிக்கப்பட்ட 2 ரசிகைகளுக்கு ‘விக்’ செய்து கொடுத்த சார்மி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வித்தியாசமான தானம் செய்து அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார் நடிகை சார்மி. அதாவது தனது நீள முடியை கட் செய்து, அதில் விக்குகள் தயாரித்து கேன்சரால் பாதிக்கப்பட்ட தனது இரண்டு ரசிகைகளுக்கு அவர் கொடுத்துள்ளார்.

‘காதல் அழிவதில்லை' படம் மூலம் தமிழில் சிம்பு ஜோடியாக அறிமுகமானவர், சார்மி. அதனைத் தொடர்ந்து ‘ஆஹா எத்தனை அழகு,' ‘லாடம்' படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

ஜோதிகா போன்ற முகவெட்டும், துறுதுறு நடிப்பும் கொண்டிருந்தாலும் சார்மிக்கு தமிழில் சொல்லிக் கொள்ளும்படி படங்கள் அமையவில்லை. இதனால் தெலுங்குப் பக்கம் போனார் சார்மி. அங்கு ரசிகர்கள் அவரைக் கொண்டாடவே தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.

கிசுகிசு...

கிசுகிசு...

அவ்வப்போது காதல் கிசுகிசுக்களில் சார்மி பெயர் அடிபட்டு வந்தது. இந்நிலையில், வித்தியாசமான தானத்தால் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளார் சார்மி.

கூந்தல்...

கூந்தல்...

அதாவது நடிகைகள் என்றாலே தங்களது அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்ற பிம்பத்தை உடைத்து, தனது நீளமான கூந்தலை வெட்டி அதனை விக் செய்து தனது ரசிகைகள் இரண்டு பேருக்கு கொடுத்துள்ளார். சார்மியின் கூந்தலை விக்காக பெற்றவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தங்களது கூந்தலை இழந்த டீன் ஏஜ் பெண்கள் ஆவர்.

ரசிகைகள்...

ரசிகைகள்...

சமீபத்தில் தோழி ஒருவர் மூலமாக அந்த ரசிகைகளை சந்தித்துள்ளார் சார்மி. அப்போது சார்மியின் நீளமானக் கூந்தலைப் பார்த்து ரசிகைகள் வியந்துள்ளனர். அதைப் பற்றியே அவர்கள் பேசியுள்ளனர். இந்த சம்பவத்தால் மனம் உருகிப் போன சார்மி, தனது கூந்தலில் விக் செய்து அவர்களுக்கே அன்பளிப்பாகக் கொடுத்து விட்டார்.

வித்தியாசமான தானம்...

வித்தியாசமான தானம்...

பல நடிகைகள் வெயில் காலம், பேஷன் என தங்களது முடியை வெட்டி வீணாக்கி வரும் போது, இப்படி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்டுள்ளார் சார்மி. தற்போது இவரது இந்த வித்தியாசமான தானம் தெலுங்குப் பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

English summary
Actress Charmy kaur has chopped off her hair tow cancer patient girls.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil