»   »  நடிகை ராகினி திரிவேதி ரூ.16 லட்சம் பண மோசடி-தயாரிப்பாளர் புகார்!

நடிகை ராகினி திரிவேதி ரூ.16 லட்சம் பண மோசடி-தயாரிப்பாளர் புகார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ராகினி திரிவேதி மீது பணமோசடி செய்து விட்டதாக கன்னட தயாரிப்பாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெயம் ரவியின் "நிமிர்ந்து நில்" படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர் ராகினி திவேதி.

"ஆர்யன்" என்ற படத்திலும் நடித்துள்ளார். கன்னடத்தில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

பண மோசடி நடிகை:

பண மோசடி நடிகை:

ராகினி திவேதி தன்னிடம் பண மோசடி செய்து விட்டதாக கன்னட தயாரிப்பாளர் வெங்கடேஷ் குற்றம் சாட்டி உள்ளார். பெங்களூரில் உள்ள ஜே.பி. நகர் போலீசிலும் அவர் மீது புகார் செய்துள்ளார்.

16 லட்ச ரூபாய்:

16 லட்ச ரூபாய்:

அதில், ‘‘நான் கன்னடத்தில் ராகினி திவேதியை வைத்து புதிய படம் தயாரிக்க திட்டமிட்டேன். இதற்காக, அவருக்கு ரூபாய்16 லட்சம் சம்பள முன்பணமாக கொடுத்தேன்.

படம் கைநழுவியது:

படம் கைநழுவியது:

இந்த பணத்தை ராகினி திவேதியின் சகோதரர் தீக்‌ஷித் என்னிடத்தில் இருந்து வாங்கிச் சென்றார். ஆனால் திட்டமிட்டபடி படத்தை எங்களால் எடுக்க முடியவில்லை. படம் தயாரிப்பதை கைவிட்டு விட்டோம்.

திருப்பித் தர மறுப்பு:

திருப்பித் தர மறுப்பு:

இதனால் ராகினி திவேதியிடம் பணத்தை திருப்பிக் கேட்டேன். ஆனால் அவர் பணத்தை தர மறுத்து விட்டார். பலதடவை கேட்டும் ரூபாய் 16 லட்சத்தை திருப்பித்தரவில்லை. அதற்கு பதிலாக வேறு படத்தில் நடித்து தருவதாக கூறினார். ராகினி திவேதியின் பதில் எங்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. நான் கொடுத்த பணத்தை தர மறுக்கும் ராகினி திவேதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்று தெரிவித்துள்ளார்.

English summary
Producer filed a cheating case on Rahini trivedi in Bangalore.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil