»   »  சினிமா பெண்களுக்கு பாதுகாப்பான தொழில் என மைக் வச்சு சொல்வேன்: அனுஷ்கா

சினிமா பெண்களுக்கு பாதுகாப்பான தொழில் என மைக் வச்சு சொல்வேன்: அனுஷ்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சினிமா பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான தொழில் என சத்தமாக சொல்வேன் என நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

யோகா டீச்சராக இருந்த அனுஷ்கா கோலிவுட், டோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார். படம் ஒன்றுக்கு ரூ.3 கோடி மற்றும் அதற்கு மேலும் சம்பளம் வாங்குகிறார்.

இந்நிலையில் சினிமா பற்றி அனுஷ்கா கூறுகையில்,

சினிமா

சினிமா

சினிமாவை பற்றி சிலர் ஒரு மாதிரியாக தவறாக பேசுவது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. சினிமா பெண்களுக்கு மிகுவும் பாதுகாப்பான தொழில் என்று சத்தமாக சொல்வேன். அதனால் பெண்கள் நடிக்க வர பயப்படத் தேவையே இல்லை.

ஓட நினைத்தேன்

ஓட நினைத்தேன்

நான் சினிமாவுக்கு வந்த புதிதில் இந்த தொழில் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதனால் பயந்தேன், அழுதேன், சினிமாவை விட்டே ஓடிவிடலாம் என்று கூட நினைத்துள்ளேன். நடிப்பு பற்றி எதுவும் தெரியாமல் வந்ததால் அப்படி நினைத்தேன். நடிப்பை கற்றுக் கொண்ட பிறகு சகஜமாகிவிட்டேன்.

முன்னணி நடிகை

முன்னணி நடிகை

நான் முன்னணி நடிகையாக இருப்பதால் சினிமா பெண்களுக்கு பாதுகாப்பான தொழில் என்று கூறவில்லை. நானும் புதுமுகமாக வந்து வளர்ந்தவள் தான். எல்லா இடங்களிலும் நல்லது கெட்டது உள்ளது. நாம் ஒழுங்காக இருந்தால் எங்குமே பிரச்சனை வராது.

என் குழந்தைகள்

என் குழந்தைகள்

சினிமா இல்லாமல் என் வாழ்க்கை இல்லை. எதிர்காலத்தில் என் பிள்ளைகள் சினிமாவுக்கு வர ஆசைப்பட்டால் அதை தடுக்க மாட்டேன். அவர்களை சினிமா துறையில் மகிழ்ச்சியுடன் அறிமுகம் செய்வேன்.

English summary
Actress Anushka said that film industry is the safest place for women to work.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X