»   »  மோசமான உடை அணிந்த பிரபலங்கள் பட்டியலில் தீபிகா: குமுறிய ரசிகர்கள்

மோசமான உடை அணிந்த பிரபலங்கள் பட்டியலில் தீபிகா: குமுறிய ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கிலாந்தை சேர்ந்த டெய்லி மெயில் நாளிதழ் எம்டிவி விருது விழாவில் கலந்து கொண்ட தீபிகா படுகோனேவை மோசமாக உடை அணிந்த பிரபலம் என தெரிவித்துள்ளது.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ள ஹாலிவுட் படம் வரும் ஜனவரி மாதம் 20ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் நெதர்லாந்தில் இருக்கும் ரோட்டர்டாம் நகரில் நடந்த எம்டிவி ஐரோப்பிய இசை விருதுகள் நிகழ்ச்சியில் தீபிகா கலந்து கொண்டார்.

[Read This: கன்னட ஹீரோ விஜய் படப்பிடிப்பில் சோகம்: ஏரியில் மூழ்கி 2 நடிகர்கள் பலி]

பச்சை நிற ஸ்கர்ட் மற்றும் பிரா போன்று கருப்பு நிறத்தில் டிசைனர் பிராலெட் அணிந்திருந்தார்.

மோசமான உடை

மோசமான உடை

விருது விழாவுக்கு மோசமாக உடை அணிந்து வந்த பிரபலங்கள் பட்டியலில் தீபிகாவின் பெயரை சேர்த்துள்ளது இங்கிலாந்தை சேர்ந்த டெய்லி மெயில் நாளிதழ். தீபிகா டென்னிஸ் வீரர் ஜோக்கோவிச்சுடன் வெளியே சென்றபோதும் அவரை டெய்லி மெயிலுக்கு அடையாளம் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர்

ட்விட்டர்

தீபிகாவை அவரது உடைக்காக டெய்லி மெயில் விமர்சித்துள்ளதற்கு இந்திய ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டெய்லி மெயிலுக்கு பதிலடி கொடுப்பது போன்று தீபிகாவின் உடையை பாராட்டி வருகிறார்கள்.

தீபிகா

இஎம்ஏஎஸ் விழாவில் நம் குயீன் தீபிகா படுகோனே. யாராலும் அவரை அடிச்சுக்க முடியாது. அவர் தான் சிறந்தவர் என ஒருவர் ட்வீட்டியுள்ளார்.

குயீன்

குயீன்... அருமை...தீபிகா படுகோனே... உங்கள் மீது அதிக அன்பு வைத்துள்ளேன் என ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

English summary
Dailymail has listed Deepika Padukone among worst dressed celebs in MTV European Music Awards. Deepika's fans took to twitter to show their anger against Dailymail.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil