»   »  இனி ரூ.15 கோடி கொடுத்தால் தான் நடிப்பாராம் தீபிகா படுகோனே!

இனி ரூ.15 கோடி கொடுத்தால் தான் நடிப்பாராம் தீபிகா படுகோனே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தனது சம்பளத்தை ரூ.10 கோடியில் இருந்து ரூ.15 கோடியாக உயர்த்தியுள்ளார்.

பாலிவுட்டின் வெற்றி நாயகியாக உள்ளவர் தீபிகா படுகோனே. கடந்த ஆண்டு அவர் நடிப்பில் பிக்கு, தமாஷா, பாஜிராவ் மஸ்தானி ஆகிய மூன்று படங்கள் வெளியாகின. அதில் தமாஷா மட்டும் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. மற்ற இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டானது.

Deepika Padukone demands Rs. 15 crore now

பாஜிராவ் மஸ்தானி படம் ஹிட்டானதையடுத்து தீபிகா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். இத்தனை நாட்களாக ரூ.10 கோடி வாங்கிய அவர் இனி ரூ.15 கோடி அளித்தால் மட்டுமே நடிப்பாராம்.

பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் தீபிகா. அவர் சம்பளத்தை அதிகரித்துள்ளபோதிலும் அவரை தங்களின் படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்கள் வரிசைகட்டி நிற்கிறார்கள்.

இந்நிலையில் தீபிகாவும், அவரது காதலரும், நடிகருமான ரன்வீர் சிங்கும் மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளனர் என்று கூறப்படுகிறது.

English summary
Bollywood actress Deepika Padukone has increased her salary from Rs. 10 crore to Rs.15 crore.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil