»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

முதல் படமான அன்புவில் அடக்க ஒடுக்கமாய் தான் நடித்தார் பிளஸ் டூ படிக்கும் நடிகையான தீபு.

ஆனால், என்ன பயன்?. அடுத்ததாக நல்ல வாய்ப்புக்கள் ஏதும் வரவில்லை. தொடர்ந்து சோப்ளாங்கி ரோல்களாககிடைத்தன.

இதனால் சினிமா சாஸ்திரப்படி துணிந்துவிட்டார். அதை தயாரிப்பாளர்களின் காதுக்கு எட்டுவது மாதிரிபி.ஆர்.ஓக்கள் மூலம் சொல்லி அனுப்ப, தெலுங்குப் படத்தில் ஹீரோயின் சான்ஸ் கிடைத்துள்ளது.

இதில் நீச்சல் உடையில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அத்தோடு கவர்ச்சி தூக்கலாக இருக்கும், இஷ்டம்இருந்தால் நடிக்கலாம் என தயாரிப்பாளர் கூறிவிட எதற்கும் தயார் என்று எழுதித் தராத குறையாக சொன்னாராமதீபு,

இப்போது அங்கு அழகைக் காட்டி வரும் இவருக்கு மேலும் சில சான்ஸ்களும் வந்து சேர்ந்துள்ளன.

தமிழில்இப்போது இவர் நடித்து வரும் உள்ளம் பட யூனிட் இதைக் கேள்விப்பட்டு, படத்தில் தீபுவுக்கு சூடான காட்சிகளைசேர்த்துவிட்டார்களாம்.

மறுக்காமல் சொன்னபடி நடித்து வருகிறாராம் தீபு.

இதையறிந்த நீ மட்டும் படத்தின் டைரக்டரும் தீபுவுக்கு பலே.. பலே காட்சிகளை வைத்துவிட்டாராம். இங்கும்தீபுவின் முழு ஒத்துழைப்பு கிடைத்திருக்கிறதாம்.

இனி எல்லா படங்களிலும் தீபு புகுந்து விளையாடுவார் என்றுஎதிர்பார்க்கலாம்.

அமோகா போய்.. திரிஷாவும் போய்...

அஜீத் நடிக்க லிங்குசாமி இயக்கும் ஜி படத்தில் ஹீரோயின் பிரச்சனை இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை.

முதலில் அமோகாவைப் பார்த்து வாயைப் பிளந்து அவரைப் போட்டார்கள்.

ஆனால், நடிக்கவும் தெரியாமல்,ஆடவும் வராமல் சொதப்பியதால் திரிஷாவைப் பிடித்துப் போட்டார்கள்.

இப்போது திரிஷாவையும் தூக்கிவிட்டார்கள்

யாராவது புதுமுகத்தைப் போடலாமா என்று யோசித்து வருகிறதாம்அஜீத் தரப்பு.

யாருக்காவது ஹீரோயின் ஆகனும்னு ஆசையிருந்தா முயற்சி பண்ணலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil