மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு.. அப்படியே அம்மா தேவயானி மாதிரி இருக்காரே!
சென்னை: நடிகை தேவயானியின் மகள் மாம்பழ நிற சேலையை அணிந்துக் கொண்டு சற்றுமுன் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அப்படியே அம்மா தேவயானி போல இருக்காரே என ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
இயக்குநர் ராஜகுமாரனை திருமணம் செய்துக்கொண்ட நடிகை தேவயானிக்கு இனியா மற்றும் பிரியங்கா என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இருவரும் நன்றாக வளர்ந்துவிட்ட நிலையில், இனியா சரிகமப நிகழ்ச்சியில் பாடல்களை பாடி போட்டியாளராக கலக்கி வருகிறார்.

மேலும், கூடிய சீக்கிரமே அவர் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேவயானி மகள்: தமிழ் சினிமாவில் அதிகம் கவர்ச்சி காட்டாமல் நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென தனி முத்திரையை அந்த காலத்திலேயே சாய் பல்லவிக்கு எல்லாம் முன்பாக பிடித்தவர் நடிகை தேவயானி தான். அஜித், விஜய், சூர்யா, கமல்ஹாசன், கார்த்தி, பார்த்திபன் என ஏகப்பட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் தேவயானி. தற்போது அவரது மகள் இனியாவும் சினிமாவை நோக்கி நகரவுள்ளது தெளிவாக தெரிகிறது.
மாம்பழ நிற சேலையில் இனியா: "மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு" என தேவயானியும் ரம்பாவும் நினைத்தேன் வந்தாய் படத்தில் பாடுவது போல அப்படியே அச்சு அசல் அம்மா தேவயானி போலவே மாம்பழ நிற சேலையில் சொக்க வைக்கிறார் இனியா. சிறு குழந்தையாக இனியாவை பார்த்து வந்த ரசிகர்கள் இப்படி இளம் குமரியாக மாறிவிட்டாரே என வர்ணித்து வருகின்றனர்.
கமலி போல: காதல் கோட்டையில் அம்மா தேவயானி கமலி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இழுத்திருப்பார். சேலை அணிந்து செம க்யூட்டாக போஸ் கொடுத்த இனியா Being Kamali என்றே கேப்ஷன் கொடுத்து அம்மாவை போலவே இருக்கேனா என ரசிகர்களை பார்த்து கேட்க, குட்டி தேவயானி என்றே ரசிகர்கள் கொஞ்சி வருகின்றனர்.
கோர்ட் படம்: தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் உள்ளிட்டோர் நடிக்கவுள்ள தெலுங்கு படமான கோர்ட் படத்தின் தமிழ் ரீமேக் மூலம் இனியா ஹீரோயினாக அறிமுகமாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடிய சீக்கிரமே இனியா நடிக்கப் போகும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











