மார்பகத்தை பெரிதாக்க.. விலா எலும்பு அறுவை சிகிச்சை செய்தாரா திஷா பதானி.. இணையத்தில் பரவும் தகவல்!

சென்னை: பாலிவுட் நடிகையான திஷா பதானி, சில முக்கிய படங்களில் நடித்து டாப் நாயகியாக வலம் வருகிறார். தமிழில் சூர்யாவின் கங்குவா படத்தின் மூலம் அறிமுகமான திஷா பதானிக்கு அந்த படம் பெயர் சொல்லும் படமாக அமையவில்லை. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் திஷா பதானியின் வீடியோவை பார்த்த இணையவாசிகள் மார்பகத்தை பெரிதாக்க, விலா எலும்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக இணையத்தில் தகவல் பரப்பி வருகிறது.

தெலுங்கில் புரி ஜெகநாத் இயக்கிய லோஃபர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை திஷா பதானி. அந்த படத்தை தொடர்ந்து இந்திக்குச் சென்ற இவர், எம்.எஸ்.தோனி படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அதன் பின் சோனு சூட்டுடன் குங் ஃபு யோகா, டைகர் ஷெராஃபுடன் பாகி 2, சல்மான் கானின் பாரத், ஆதித்யா ராய் கபூருடன் மலங், பிரபுதேவ இயக்கிய ராதே ஆகிய படங்களில் நடித்தார்.

நடிகை திஷா பதானி: பாலிவுட் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்த நடிகை திஷா பதானி, ஞானவேல் ராஜா தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கிய கங்குவா படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தியேட்டரில் வெளியான இப்படம், ஆயிரம் கோடியை வசூலிக்கும், 2 ஆயிரம் கோடி என தயாரிப்பாளர் கூறிவந்த நிலையில் படத்திற்கு குவிந்த நெகட்டிவ் விமர்சனத்தால் போட்ட பணத்தைக்கூட எடுக்க முடியாமல் போனது.

Disha Patani surgery
Photo Credit:

விலா எலும்பு அறுவை சிகிச்சை: திஷா பதானி தமிழில் அறிமுகமான முதல் படமே எடுபடமல் போனதால், மீண்டும் இந்தி சினிமாவில் கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அண்மையில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள், திஷா பதானி விலா எலும்புகளை அகற்றும் அறுவை சிகிச்சை (Rib Removal Surgery) செய்துகொண்டதாக ஒரு செய்தி பரவி வருகிறது. அதாவது, விலா எலும்புகளை அகற்றும் அறுவை சிகிச்சையில், 11 மற்றும் 12வது விலா எலும்புகள் நீக்கப்பட்டுவிட்டதாகவும். இவை (Floating Ribs) என்று அழைக்கப்படுகின்றன, இவை மார்பக எலும்புடன் இணைக்கப்பட்டிருப்பதில்லை. இந்த அறுவை சிகிச்சையின் மூலம் இடுப்பை மெல்லியதாகவும், மார்பு பகுதி பெரியதாகவும் காட்ட முடியும் அதற்காக திஷா இந்த அறுவை சிகிச்சையை செய்து கொண்டார் என கூறப்படுகிறது.

ஆபத்தானது: ஆனால், சில இணையவாசிகள் பல பிரபலங்கள் filters பயன்படுத்தி போட்டோ அல்லது வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிடுகிறார்கள். இதனால் இடுப்பின் பகுதி மெலிந்து காணப்படும், திஷாவின் காணொளியை கவனித்து பார்த்தால், திஷா விலா எலும்புகளை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யவில்லை என்பது தெரியும். மேலும், விலா எலும்புகளை அகற்றும் அறுவை சிகிச்சை பாதுகாப்பானது இல்லை. பெரும்பாலான மருத்துவர்களும் இதை பரிந்துரைப்பதில்லை. இது அதிக ஆபத்துள்ள ஒப்பனை அறுவை சிகிச்சை, இதனால், உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் போன்ற முக்கிய உள் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும். விலா எலும்புகளை அகற்றும் இந்த அறுவை சிகிச்சைக்கு ₹10 லட்சம் முதல் ₹20 லட்சம் வரை செலவாகும் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இப்படி இணையத்தில் திஷா பதானி குறித்து பல பிரச்சனை சென்று கொண்டு இருக்க, இதுகுறித்து அவர் எந்த கருத்தையும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X