»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

குறும்பு படத்தில் நரேசுக்கு ஜோடியாக ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டியவர்கள் தியாவும் நிகிதாவும். அதிலும் தியாரொம்ப ஓவராகவே போனார்.

படம் தோல்வி. இதனால் அந்தப் படத்தைத் தொடர்ந்து இருவருக்குமே வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. மிகுந்தமுயற்சிக்கு செய்த பின் தியாவுக்கு மட்டும் ஒரு படம் கிடைத்தது. தனுசுடன் ட்ரீம்ஸ் படத்தில் நடிக்கஒப்பந்தமானார்.

ஆனால், அந்தப் படத்தின் கதை பிடிக்கவில்லை என்று தனுசின் அப்பா கஸ்தூரிராஜா தகராறு செய்யவே, திரைக்கதையை மீண்டும் புதியாய் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால் இந்தப் படத்தின் படப் பிடிப்பு அப்படியே நின்றுபோய் படமே அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படம் முடியும் வரை தமிழில் வேறு எதிலும் புக் ஆகக் கூடாது என்று தியாவுக்கு நிபந்தனை வேறுபோட்டுவிட்டார்கள்.

பெரும் முயற்சிக்குப் பின் கிடைத்த வாய்ப்பும் இப்படிப் போய்விட்டதால், தமிழில் வேறு சான்சும் பிடிக்க முடியாதுஎன்பதால், வெறுத்துப் போயிருந்த தியாவுக்கு சிலர் கேரளத்தை கை காட்ட அங்கே போய் இறஙகிவாய்ப்புகளுக்காக பிரம்மப் பிரயத்தனம் செய்தார்.

இதைத் தொடர்ந்து ஒரு படம் கிடைத்துள்ளது. முண்டு கட்டி நடிக்கும் படமாம்.

சும்மாவே கவர்ச்சியில் கிறங்கடிக்கும் தியாவுக்கு இது அல்வா சாப்பிடுவது மாதிரி அல்லவா. புகுந்து விளையாடிக்கொண்டிருக்கிறார்.

இந் நிலையில் இவருடன் குறும்பு படத்தில் நடித்த நிகிதாவும் தனது போட்டோ ஆல்பங்களுடன்தயாரிப்பாளர்களின் அலுவலகங்களுக்கு படியேறி, அலையே அலை என்று அலைந்தற்கு பலன் கிடைத்துவிட்டது.

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியின் முதல் மகன் ஜீவாவைத் தொடர்ந்து அவரது இரண்டாவதுமகன் ரமேஷ் ஹீரோவாகப் போகிறார்.

அப்பாவே தயாரிக்கும் இந்தப் படத்தை வின்சென்ட் செல்வாஇயக்குகிறார்.

இதில் ரமேசுக்கு ஜோடியாக நிகிதாவை புக் செய்து அவருக்கு மறு வாழ்வு கிடைக்கச் செய்திருக்கிறார் செளத்ரி.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil