கீர்த்தி சுரேஷிற்கு பிடித்த நாடு எது தெரியுமா...மேடையில் கலாய்த்த விக்ரம்

சென்னை : கீர்த்தி சுரேஷிற்கு மிகவும் பிடித்த நாடு என்பது பற்றி அவர் சொன்னதும் அதை மேடையிலேயே வைத்து கலாய்த்து தள்ளி உள்ளார் விக்ரம். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் செம டிரெண்டாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பிரபலமான முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தென்னிந்திய மொழி சினிமாக்களில் அனைத்து டாப் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார் கீர்த்தி சுரேஷ். தற்போது மெகா ஸ்டார்களுக்கு தங்கையாக நடித்து வருகிறார்கள்.

தங்கை ரோலில் கலக்கும் கீர்த்தி

தங்கை ரோலில் கலக்கும் கீர்த்தி

மகாநதி படத்தில் மறைந்த நடிகை சாவித்திரி ரோலில் நடித்து, நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்ற கீர்த்தி சுரேஷை தான் சென்டிமென்ட்டான படங்களுக்கு புக் செய்து வருகிறார்கள். அண்ணாத்த படத்தில் ரஜினிக்கும், சாணி காயிதம் படத்தில் செல்வராகவனுக்கும் தங்கையாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், தெலுங்கில் போலோ சங்கர் படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடித்து வருகிறார்.

 குவியும் பட வாய்ப்புக்கள்

குவியும் பட வாய்ப்புக்கள்

தெலுங்கில் நானிக்க ஜோடியாக தசரா படத்தில் நடிக்க புக்காகி இருப்பதை போன்று தமிழில் பாலா-சூர்யா இணையும் படம் உள்ளிட்ட சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் கீர்த்தி சுரேஷ். சினிமா, சோஷியல் மீடியா என ரசிகர்களின் கவனத்தை தொடர்ந்து தன் பக்கம் ஈர்த்து வருகிறார்கள் கீர்த்தி சுரேஷ்.

 கீர்த்தி சுரேஷிற்கு பிடித்த நாடு

கீர்த்தி சுரேஷிற்கு பிடித்த நாடு

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ரம், டைரக்டர் ஹரி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றின் வீடியோ க்ளிப்ஸ் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பிரபல தொகுப்பாளினி டிடி, அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அப்போது கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷிடம், கொஞ்சம் நாள் ஏதாவது ஒரு வெளிநாட்டிற்கு சென்று இருந்து விடலாம் என நினைத்தால் எந்த நாட்டிற்கு போவீர்கள் என கேட்கிறார்.

இந்த அசிங்கம் தேவையா

இந்த அசிங்கம் தேவையா

அதற்கு முதல் ஆளாக பதில் சொல்லும் கீர்த்தி சுரேஷ், நார்த் இந்தியா என்கிறார். இதை பார்த்துக் கொண்டிருந்த விக்ரம், ஆமாம்...நார்த் இந்தியா நம்ம நாட்டில் இல்லை என சொல்லி கலாய்க்கிறார். அதற்கு டிடி.,யும் அந்த நாட்டில் எங்கு சென்று நீங்கள் இருப்பீர்கள் என சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க, விக்ரம் உள்ளிட்டோர் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். இதனால் என்ன செய்வதென தெரியாமல் திரிதிரிவென விழிக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்த வீடியோவை நெட்டிசன்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷிற்கு இது கூடவா தெரியாது

கீர்த்தி சுரேஷிற்கு இது கூடவா தெரியாது

வெளிநாட்டை பற்றி கேட்டால் இவர் நார்த் இந்தியா என்கிறாரே. நார்த் இந்தியா என வேற நாடா. இது கூடவா கீர்த்தி சுரேஷிற்கு தெரியாது என நெட்டிசன்களும் கலாய்த்து வருகின்றனர். அதோடு, கேரளாவில் இருந்து தமிழகம் வந்து தமிழ், தெலுங்கில் டாப் நடிகையாக இருக்கும் இவர் போக நினைக்கும் இடம் மட்டும் நார்த் இந்தியாவா என திட்டி தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X