»   »  சாய்பல்லவியின் ரொமான்ஸ்... கொண்டாடும் ரசிகர்கள்

சாய்பல்லவியின் ரொமான்ஸ்... கொண்டாடும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரேமம் மலர் டீச்சரான சாய்பல்லவி மலையாளத்தில் அடுத்து நடிக்கும் படம் களி... இந்த படமும் அவருக்கு ரொமான்ஸ் படமாகவே அமைந்துள்ளது என்பதை படத்தின் ஃபஸ்ட் லுக் பார்க்கும் போதே தெரிகிறது. மணிரத்னத்தின் படத்தில் கார்த்தியுடன் ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் சாய் பல்லவி. இதுவும் காதலை சொல்லும் படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு அறிமுக நடிகைக்கோ நடிகருக்கு தனது முதல் படம் நூறு நாட்களைத் தாண்டி ஓடினால் அதைவிட பெரிய வரம் எதுவும் வேண்டுமா என்ன..? அப்படித்தான் மலையாளத்தில் சாய்பல்லவி நடித்த பிரேமம் படத்தை கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். சென்னையிலும் கூட பிரேமம் நூறு நாட்களை தாண்டியது காரணம் மலர் டீச்சர் மீதான கிரேஸ்தான்.

அதேபோல மம்முட்டியின் மகன் என்கிற அறிமுகத்தோடு துல்கர் சல்மான் ஹீரோவாக களம் இறங்கிய, 'செகண்ட் ஷோ' படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.. இந்த நான்கு வருடங்களுக்குள் துல்கரின் வளர்ச்சி கிடுகிடுவென உயர்ந்து விட்டது.. ஆனாலும் ரசிகர்கள் இன்னும் 'செகண்ட் ஷோ' படத்தை கொண்டாடவே செய்கிறார்கள்.

துல்கருடன் சாய் பல்லவி

துல்கருடன் சாய் பல்லவி

துல்கரும், சாய் பல்லவியும் இணைந்து காதல் செய்யும் படம்தான் களி. 'களி' படத்தை இயக்கி வரும் இயக்குனர் சமீர் தாஹிர் தங்களது படத்தின் பர்ஸ்ட் லுக்கை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளார். பர்ஸ்ட் லுக்கை பார்க்கும்போதே அருமையான ரொமாண்டிக் படம் என்பது தெரிகிறது.

கார்த்தியுடன் சாய் பல்லவி

கார்த்தியுடன் சாய் பல்லவி

ஓ காதல் கண்மணி' படத்தைத் தொடர்ந்து தற்போது கார்த்தி நடிக்கும் புதிய படத்திற்கான கதை எழுதி முடித்துவிட்டார் மணிரத்னம். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் துவங்கவிருக்கிறது. இப்படத்தின் நாயகியாக 'ப்ரேமம்' படத்தின் மூலம் பிரபலமான சாய் பல்லவி நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காதல் படங்கள்

காதல் படங்கள்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கும் இப்படத்துக்கு ரவி வர்மன் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார். முதல் படம் பிரேமத்தை தொடர்ந்து ரொமான்டிங் படங்களாகவே சாய் பல்லவிக்கு அமைவதின் ரகசியம்தான் என்ன என்று தெரியவலையே?

வெற்றிப்படங்களாகுமா?

வெற்றிப்படங்களாகுமா?

பிரேமம் படத்தைப் போலவே களி படமும் வெற்றிப்படமாகுமா? மணிரத்னம் படம் மூலம் தமிழுக்கு வரும் சாய் பல்லவியை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

English summary
The Kali first look — two lovers lost in their own world — is for the romantics in us — Sai Pallavi and Dulquer are in a forehead-lock with a gentle smile that talks volumes about the happiness.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil