Don't Miss!
- News
பொன்னையன் சொன்னது..அதை விடுங்க அரசியல்ல சகஜம்..பெருசா எடுத்துக்கலை..சட்டென சொன்ன அண்ணாமலை
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Finance
புதிய வருமான வரிக்கு பலே வரவேற்பு.. 66% பேர் மாறுவார்கள்.. சொல்வது யார் தெரியுமா..?
- Sports
"முன்பு கோலி.. இப்போ உம்ரான் மாலிக்" இந்திய வீரர்களை சீண்டும் சோஹைல் கான்.. இப்படியா சொல்லுவீங்க??
- Lifestyle
சுக்கிரன் உருவாக்கும் மாளவியா யோகம்: பிப்ரவரி 15 முதல் இந்த 5 ராசிக்கு சூப்பரா இருக்கப் போகுது..
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சினிமாவில் வெற்றி தோல்வியை நம்பக்கூடாது -சார்ப்பட்டா பரம்பரை நாயகி வெளிப்படை
சென்னை : சார்ப்பட்டா பரம்பரை படம் மூலம் அனைவரது கவனத்தையும் கவர்ந்தவர் துஷாரா விஜயன்.
Recommended Video
இந்தப் படத்தில் இவரது இயல்பான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
எப்போ
வருவீங்க
கமல்
சார்...ஒரே
நாளில்
பிக்பாஸ்
ரசிகர்களை
கதற
விட்ட
ராஜமாதா
இந்நிலையில் சினிமாவில் வெற்றி தோல்வியை நம்பாமல் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

நடிகை துஷாரா விஜயன்
நடிகை துஷாரா விஜயன் சார்ப்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்து பெயர் பெற்றுள்ளார். குத்துச்சண்டையை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தில் இடையில் வழிதவறும் ஆர்யாவை வழிநடத்த இவர் நடத்தும் போராட்டம் சிறப்பாக அமைந்திருந்தது. குழந்தையுடன் பரிதவிக்கும் கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டது.

அடுத்தடுத்த வாய்ப்புகள்
இந்தப் படம் கொடுத்த வெற்றி இவருக்கு அடுத்தடுத்த படங்களுக்கான வாய்ப்புகளை பெற்றுத் தந்துள்ளது. வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாசுடன் அநீதி என்ற படத்திலும் பா ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராமுடன் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்திலும் இவர் தற்போது நடித்து வருகிறார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களுக்கான கதைகளையும் இவர் கேட்டு வருகிறார்.

வெற்றி தோல்வியை நம்பக்கூடாது
இந்நிலையில் சினிமாவை பொருத்தவரை வெற்றி தோல்வி இரண்டையும் நம்பாமல் நமது திறமையை மட்டுமே நம்பி தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் துஷாரா. மேலும் தனது திறமைக்கு சவால் தரும் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதைகளை தேர்ந்தெடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கதை தேர்வு முக்கியம்
தன்னுடைய கதை தேர்வு தனக்கு மிகவும் முக்கியமானது என்றும் பொறுமையே தன்னை இந்த இடத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். மேலும் தனக்கு சினிமா எல்லாமுமாக உள்ளதாகவும் அவர் உற்சாகம் தெரிவித்துள்ளார். திறமையும் பொறுமையும் இருந்தால் சினிமாவில் சிறப்பான அங்கீகாரத்தை பெறலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வாய்ப்பை பயன்படுத்த வேண்டும்
பெண்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்த தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றும் திறமையை தொடர்ந்து வளர்த்துக் கொண்டால் தகுந்த வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தான் இந்த இடத்தை அடைவதற்காக 7 ஆண்டுகள் போராடியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அழுத்தமான கதாபாத்திரம்
தன்னுடைய திறமைக்கு சவால்விடும் வகையில் சில நிமிடங்கள் வந்தாலும் தன்னுடைய கதாபாத்திரம் மக்கள் மனதில் நிலைக்க வேண்டும் என்பதையும் மனதில் கொண்டு கதாபாத்திர தேர்வை மேற்கொண்டு வருகிறார் துஷாரா விஜயன். அழகுடன் திறமையும் கொண்ட துஷாராவிற்கு வாய்ப்புகள் சிறப்பாக அமைந்து வருகின்றன. இதை அவர் சிறப்பாக பயன்படுத்துவார் என நம்பலாம்.