‘என் பேரு மீனாகுமாரி‘ பாட்டுக்கு ஆட்டம் போட்ட நடிகையை ஞாபகம் இருக்கா? அடையாளமே தெரியலையே!
சென்னை: சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி, விஜி என அந்த காலத்தில் ஐட்டம் பாடலுக்கு என்றே தனி நடிகைகள் இருந்தார்கள். அதன் பின், நடிகைகளே களமிறங்கி அதிரடியான கவர்ச்சி காட்டி ஆட்டம் போட ஆரம்பித்தால், ஐட்டம் டான்ஸ் நடிகைகள் பெயருக்கு என்று ஒன்று இரண்டு படத்தில் வந்து ஆடிவிட்டு சென்றனர். அப்படி சியான் விக்ரம் நடித்த கந்தசாமி படத்தில் 'என் பேரு மீனாகுமாரி' பாடலுக்கு குலுங்கி குலுங்கி டான்ஸ் ஆடியவர் தான் முமைத் கான். இப்போது அந்த நடிகை எப்படி இருக்கிறார் தெரியுமா?
நடிகை முமைத் கான்: நடிகை முமைத் கான் 2002 ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவின் ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடியதன் மூலம், சினிமாவில் என்ட்ரியானார். இந்தி,தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆகிய தென்னிந்திய மொழி படங்களில் நடித்துள்ள இவர், கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில், நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே பாடலுக்கு ஆட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்தார். அதைத்தொடர்ந்து, விஜய்யின் போக்கிரி படத்தில், என் செல்லப்பேரு ஆப்பிள் பாடலுக்கும், கந்தசாமி படத்தில், என் பேரு மீனாகுமாரி உள்பட பல படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

நடிகை முமைத் கான்: இவர் ஐட்டம் டான்சராக மட்டும் இல்லாமல், மம்முட்டியான், மறந்தேன் மன்னித்தேன், மருதமலை, வில்லு உள்ளிட்ட பல படங்களில் கௌரவ வேடங்களிலும் நடித்து உள்ளார். நடிகை முமைத் கான் வேடங்களில் கடந்த சில வருடங்களாக சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் டல்லாக உள்ளது. அண்மையில் முமைத் கான் பெயர், போதை பொருள் கடத்தல் வழக்கிலும் அடிபட்டு சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது.
அடையாளமே தெரியலையே: படவாய்ப்பு எதுவும் இல்லாததால், வீட்டில் பொழுதை கழித்து வரும் முகமைத் கான். தற்போது உடல் எடை அதிகரித்து காணப்படுகிறார். திரைப்படங்களில் தென்படாத முமைத் கான் அவ்வப்போது தனது ரசிகர்களை குஷிப்படுத்த தனது இன்ஸ்டாகிராமில் க தாறுமாறாக கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர், இன்ஸ்டாகிராமில் குட்டி டவுசரை போட்டு ஆட்டம் போட்டு இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ஃபேன்ஸ் அவருக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











