»   »  நடிக, நடிகையரை யாரும் மதிப்பது இல்லை..கரீனா கபூர் வருத்தம்

நடிக, நடிகையரை யாரும் மதிப்பது இல்லை..கரீனா கபூர் வருத்தம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தற்போதைய ரசிகர்கள் மத்தியில் நடிக, நடிகையருக்கு மரியாதை இல்லை என்று இந்தி நடிகை கரீனா கபூர் வருத்தப்பட்டிருக்கிறார்.

பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலிகானின் மனைவி கரீனா கபூர். திருமணத்திற்குப் பின்பும் கரீனா தொடர்ந்து நடித்து வருகிறார்.

Fans Not Respect to Actor, Actress says Kareena Kapoor

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'கி அண்ட் கா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் கரீனா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் "திரைப்பட உலகைப் பொறுத்தவரை முந்தைய காலங்களில் நடிக,நடிகையருக்கு ஒரு மரியாதை இருந்தது.

பழைய நடிகர், நடிகைகளை ரசிகர்கள் மதிக்க செய்தனர். மேலும் பொது நிகழ்ச்சிகளில் அவர்களை பார்க்க வேண்டும் என்றும் விருப்பப்பட்டனர்.

ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. இப்போதுள்ள நடிகர், நடிகைகளை யாரும் மதிப்பது. இதற்கான முழுக்காரணமும் நடிகர், நடிகையரையே சேரும்.

தங்களது படங்கள் மற்றும் குளியலறை வீடியோக்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பரவ விடுகின்றனர். இதனால்தான் நடிகர்களுக்கு மதிப்பு, மரியாதை இல்லாமல் போய்விட்டது.

நடிகர்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் ரசிகர்களிடம் குறைந்து விட்டது.நடிகர்,நடிகைகள் என்றுமே புரட்சியை ஏற்படுத்துவதில்லை,மக்களை சந்தோஷப்படுத்துவதே எங்கள் வேலை" என்று கூறியிருக்கிறார்.

English summary
"Now a Days Fans Not Respect to Actor, Actress" Kareena Kapoor says in Recent Interview.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil