வெறித்தனமாக வேற லெவல் ஒர்க்அவுட்...நதியாவை பார்த்து ஆச்சரியப்படும் ரசிகர்கள்
சென்னை : 1980 களில் தென்னிந்திய சினிமாவின் டாப் ஹீரோயினாக இருந்தவர் நதியா. தமிழில் பூவே பூச்சூடவா படத்தின் மூலம் அறிமுகமான நதியா, முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதினை வென்றார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்த நதியா, ஏறக்குறைய டாப் ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நதியா, பீக்கில் இருந்த போதே திருமணம் செய்து கொண்டு, சினிமாவில் இருந்து விலகினார்.

நதியாவின் ரீஎன்ட்ரி
திருமணத்திற்கு பிறகு கணவருடன் அமெரிக்காவில் செட்டில் ஆன நதியா, இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயானார். பல ஆண்டுகளுக்கு பிறகு ஜெயம் ரவி நடித்த எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்கு ரீஎன்ட்ரி கொடுத்தார் நதியா. அதைத் தொடர்ந்து பட வாய்ப்புக்கள் அதிகரித்ததால், மும்பை குடும்பத்துடன் செட்டில் ஆனார்.

இளமையான அம்மா
இளமையான அம்மாவாக பல படங்களில் நடித்து அசத்தி வரும் நதியா, சோஷியல் மீடியாவிலும் செம ஆக்டிவாக இருப்பவர். தொடர்ந்து தான் ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்கள், ஃபிட்னஸ் சீக்ரெட்களை வெளியிட்டு வருகிறார் நதியா.

வேறலெவல் ஒர்க்அவுட்
இந்நிலையில் பாக்சிங், ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வது போன்றவை அடங்கிய வீடியோ ஒன்றை நதியா தற்போது வெளியிட்டுள்ளார். வெறித்தனமாக நதியாக ஒர்க் அவுட் செய்யும் இந்த வீடியோ ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. ஏராளமானோர் லைக் செய்து பாராட்டி வருகின்றனர்.

இளமை ரகசியம் என்ன
நாற்பத்தி ஐந்து வயதை கடந்த பிறகும் என்றும் இளமையாக காட்சி தரும் நதியாவிடம் ஏராளமான ரசிகர்கள், இளமை மற்றும் ஃபிட்னஸ் சீக்ரெட் கேட்டு வருகின்றனர். கலக்குறீங்க மேடம் என ஏராளமானோர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். விரைவில் நதியா மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கமலுக்கு ஜோடியாகிறாரா
நதியா மீண்டும் தமிழில் அறிமுகமாக உள்ள படம் த்ரிஷ்யம் 2 தமிழ் ரீமேக்கான பாபநாசம் 2 படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. கெளதமிக்கு பதில் அவரது ரோலில் நதியா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினி உள்ளிட்ட பல டாப் ஸ்டார்களுடன் நடித்திருந்தாலும் நதியா இதுவரை கமலுடன் சேர்ந்து நடித்ததே இல்லை. அதனால் இந்த படத்தில் நதியாவை கமலுக்கு ஜோடியாக நடிக்க வைத்தால் அது வித்தியாசமான காம்போவாக இருக்கும், ரசிகர்களை கவரும் என தயாரிப்பாளர்கள் நினைப்பதாக சமீபத்தில் கூறப்பட்டது.


Click it and Unblock the Notifications











