»   »  மூக்குத்தி குத்தி.. சேலை கட்டி.. மராத்தியாக மாறிய மறத் தமிழச்சி!

மூக்குத்தி குத்தி.. சேலை கட்டி.. மராத்தியாக மாறிய மறத் தமிழச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: அப்பாவுக்குத் தப்பாத பொண்ணாக இருக்கிறார் ஸ்ருதி ஹாசன். கேரக்டருக்கேற்றார் போல மாறுவதில் அவருக்கு நிகர் அவர்தான். இப்போது இந்திப் படத்தில் மராத்திப் பெண்ணாக நடிக்கும் ஸ்ருதி, மராத்தி பெண்ணாக அச்சு அசலாக மாறி ஆச்சரியமூட்டியுள்ளார்.

கப்பார் இஸ் பேக் என்ற இந்திப் படத்தில்தான் இந்த புதிய அவதாரத்தில் வருகிறார் ஸ்ருதி. அக்ஷய் குமாருடன் இணைந்து இப்படத்தில் நடிக்கிறார் ஸ்ருதி.

இப்படத்தில் இவருக்கு மகாராஷ்டிர பெண்ணாக வேடமாம். இதற்காக அவரை மராத்தி பெண்ணாகவே உருமாற்றியுள்ளனர். அவரும் அப்படியே மாறிப் போய் நிற்கிரார்.

பாரம்பரிய சேலை கட்டி...

பாரம்பரிய சேலை கட்டி...

மராத்தி பாரம்பரிய சேலை கட்டி, மூக்குத்து குத்தி, பார்க்கவே ஆச்சரியமாக இருக்கிறது ஸ்ருதியின் லுக். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதங்களில் படு வேகமாக பரவி வருகிறது.

நதானி போட்டு...

நதானி போட்டு...

நதானி என்று மூக்குத்திக்கு மராத்தியில் பெயர். அது ஸ்ருதி மூக்கில் ஜம்மென்று உட்கார்ந்திருக்கிறது. அதேபோல பாரம்பரியமான நவவாரி சேலையில் சூப்பராக இருக்கிறார் ஸ்ருதி.

தேவதை...

தேவதை...

பிங்க் நிற சேலையில் ஸ்ருதி மேலும் அழகேறி தேவதை மாதிரி ஜொலிக்கிறார். கூடவே அந்த பளிச் சிரிப்பும் சேர்ந்து கொள்ளவே, கண்ணுபடப் போகுதய்யா சின்னக் கவுண்டரே என்று பாட்டுப் பாடத் தோன்றுகிறது.

போராளி வேடம்...

போராளி வேடம்...

கப்பார் என்ற ஊழலுக்கு எதிராக போராடும் போராளி வேடத்தில் நடித்துள்ளார் அக்ஷய் குமார். இது வேறு ஒன்றுமல்ல. தமிழில் வெளியான ரமணா படத்தின் ரீமேக்தான்.

கப்பார் இஸ் பேக்...

கப்பார் இஸ் பேக்...

2002ம் ஆண்டு விஜயகாந்த் நடித்து வெளியான மாபெரும் ஹிட் படமான ரமணாவைத்தான் கப்பார் இஸ் பேக் என்ற பெயரில் படமாக்குகின்றனர் இந்தியில். இப்படத்தில் கரீனா கபூரும் இருக்கிறார். கிரிஷ் இயக்குகிறார். மே 1ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

English summary
Ever since the film Gabbar Is Back has been in the news, we've known that Shruti Haasan is the actress playing a role across Akshay Kumar in it. The actress will be essaying a Maharashtrian character in this upcoming film. And now, the Gabbar makers have revealed what the Maharashtrian Shruti looks like in the film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil