»   »  எங்கப்பா, கவுதமி பிரிய நான் காரணமா?: ஸ்ருதி ஹாஸன் விளக்கம்

எங்கப்பா, கவுதமி பிரிய நான் காரணமா?: ஸ்ருதி ஹாஸன் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கவுதமியும், உலக நாயகன் கமல் ஹாஸனும் பிரிய தான் காரணம் இல்லை என நடிகை ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார்.

நடிகை கவுதமியும், உலக நாயகன் கமல் ஹாஸனும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கடந்த 13 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கமலை பிரிவதாக கவுதமி நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.

Gautami-Kamal break up: Shruti Haasan clarifies

கமலை பிரிவதற்கான காரணத்தை கேட்க வேண்டாம் என அவர் தெரிவித்தார். இந்நிலையில் கவுதமிக்கும், ஸ்ருதி ஹாஸனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை தான் அவர் இப்படி ஒரு முடிவை எடுக்க காரணம் என்று கூறப்பட்டது.

இது குறித்து ஸ்ருதி ஹாஸனின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,

ஸ்ருதி யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் முடிவுகள் குறித்து எப்பொழுதுமே கருத்து தெரிவித்தது இல்லை. எது நடந்தாலும் குடும்பம், பெற்றோர், தங்கைக்கு ஆதரவாக இருப்பார் அவர் என்றார்.

English summary
Shruti Haasan's spokesperson clarifies about Kamal Haasan and Gautami's break up.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil