»   »  யாதுமாகி நின்றாள்... சினிமா உலக ரகசியங்களை அம்பலப்படுத்தும் படம்!

யாதுமாகி நின்றாள்... சினிமா உலக ரகசியங்களை அம்பலப்படுத்தும் படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சினிமா உலகம் வெளிப் பார்வைக்கு ரொம்ப கவர்ச்சியானது. ஆனால் அந்த கவர்ச்சிக்குப் பின்னால் உள்ள ரகசியங்கள்.. அழுகுரல்கள்? உலகத்தால் கட்டாயம் கேட்கப்பட வேண்டும் என்ற நோக்கில் ஒரு படத்தை உருவாக்குகிறார்கள்.

படத்துக்குப் பெயர் யாதுமாகி நின்றாள்.

gayathri

நடன இயக்குநரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் இயக்கும் இந்தப் படம், பின்னனி நடனம் ஆடும் பெண்களின் தினசரி வாழ்வில் நடக்கும் உண்மைக் கதைகளை அடிப்படையாக கொண்டது.

'குடும்ப சூழ்நிலை காரணமாக நடனமாடும் பெண்ணாக தள்ளப்பட்ட பள்ளி செல்லும் சிறுமி, சாதரண கனவுகளோடும் ஆசைகளோடும் வாழ்க்கையை பயணிக்கிறாள். ஆனால், முற்றிலும் மாறாக உண்மையில் ஒருவரால் நினைத்து பார்க்க முடியாத கொடுமைகளும், அவலங்களும் அனுபவிக்கும் அவளது வாழ்க்கையே படத்தின் கதை', என்கிறார் காயத்ரி ரகுராம்.

படத்தின் நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் வெளியாக உள்ளது.

English summary
Actress Gayathri Raghuram is directing a movie titled Yadhumagi Nindral.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil