twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எங்க குடும்பத்துக்கு ஒரு அவார்ட் கூட கிடையாதா.. குமுறும் காயத்ரி ரகுராம்

    By Sudha
    |

    கடந்த 75 வருடமாக திரைத்துறையுடன் தொடர்பு கொண்டுள்ளது எங்களது குடும்பம். ஆனால் சினிமா நூற்றாண்டு விழாவில் எங்களது குடும்பத்தைச் சேர்ந்த யாருக்குமே ஒரு விருது கூட தரவில்லை. இது நியாயமல்ல என்று குமுறியுள்ளார் நடிகையும் டான்ஸ் மாஸ்டர் ரகுராமின் மகளுமான காயத்ரி ரகுராம்.

    காயத்ரி தனது அதிருப்தியையும், கோபத்தையும், விரக்தியையும் டிவிட்டர் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

    சினிமாவுக்காகவே வாழ்ந்து வரும் தனது குடும்பத்தார் யாருக்குமே விருது கொடுக்கப்படாதது மிகவும் பாரபட்சமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

    நடனக் குடும்பம்

    நடனக் குடும்பம்

    காயத்ரி ரகுமாரின் குடும்பத்தார் அத்தனை பேருமே டான்ஸர்கள்தான்.

    அப்பா ரகுராம் - அம்மா கிரிஜா

    அப்பா ரகுராம் - அம்மா கிரிஜா

    தந்தை ரகுராம் பிரபலமான டான்ஸ் மாஸ்டர். அம்மா கிரிஜாவும் டான்ஸ் மாஸ்டர்தான்.

    சித்திமார்கள் கலா, பிருந்தா

    சித்திமார்கள் கலா, பிருந்தா

    அதேபோல காயத்ரியின் சித்திகளான கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர் ஆகியோரும் டான்ஸ் மாஸ்டர்கள்தான்.

    தாத்தா கே.சுப்ரமணியம் பிரபல இயக்குநர்

    தாத்தா கே.சுப்ரமணியம் பிரபல இயக்குநர்

    இவரது கொள்ளுத் தாத்தா கே.சுப்ரமணியம் அந்தக் காலத்தில் பிரபலமான இயக்குநர்,தயாரிப்பாளர் ஆவார்.

    மானாட மயிலாட

    மானாட மயிலாட

    இவர்களில் கலா மாஸ்டர் மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வருகிறார். இது கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிறது பல வருடங்களாக. காயத்ரி குடும்பத்தினருக்கு அவார்டு கிடைக்காமல்போக இது ஒரு காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது.

    டிவிட்டரில் குமுறிய காயத்ரி

    டிவிட்டரில் குமுறிய காயத்ரி

    இப்படி யாருக்குமே அவார்டு கிடைக்காமல் போனது குறித்து டிவிட்டரில் குமுறல் வெளியிட்டுள்ளார் காயத்ரி. அவர் கூறுகையில், எனக்கு இந்த நூற்றாண்டு விழாவின் அர்த்தமே புரியவில்லை. இது மிகவும் பாரபட்சமானது. எந்த அர்த்தமும் இருப்பதாக தெரியவில்லை.

    சாதனை செய்தவர்களை புறக்கணிப்பதா

    சாதனை செய்தவர்களை புறக்கணிப்பதா

    சாதனை செய்தவர்களை புறக்கணித்துள்ளனர். கடுமையாக உழைத்த அத்தனை பேரையும் முட்டாள்களாக்கியுள்ளனர்.

    என்னை விடுங்கள்

    என்னை விடுங்கள்

    என்னை விடுங்கள்.எனது குடும்பத்தைப் பாருங்கள். அவர்கள் 75 வருடங்களாக இத்துறையில் இருந்து வருகிறார்கள். எனது கொள்ளுத்தாத்தா கே.சுப்ரமணியம் பிரபலமான இயக்குநர், தயாரிப்பாளர். எனது தந்தை,எனது சித்திகள்என யாருக்குமே எதுவுமே தரவில்லை. ஒரு விருது கூட தரவில்லை. எனது கொள்ளுத்தாத்தா, தென்னிந்திய திரைப்படவர்த்தக சபையை நிறுவியர்களில் ஒருவர் வேறு.. என்று வெடித்துள்ளார் காயத்ரி.

    தமிழக அரசு விழா

    தமிழக அரசு விழா

    திரைப்பட நூற்றாண்டு விழா ஏற்கனவே பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விழாவை ஏற்பாடு செய்து நடத்தியது தமிழகஅரசு என்பது நினைவிருக்கலாம்

    சிம்ரன், விவேக்குக்கெல்லாம் விருது

    சிம்ரன், விவேக்குக்கெல்லாம் விருது

    முதல்வர் ஜெயலலிதா இந்த விழாவின்போது பலருக்கு விருது வழங்கிக் கெளரவித்தார். ஜெயா டிவியில் ஜாக்பாட் நிகழ்ச்சியைத் தொகுத்து அளிக்கும் சிம்ரனுக்கும், டபுள் மீனிங் அர்த்தமா்கவே பல படங்களில் நடித்த விவேக்குக்கும் கூட விருது கொடுத்தார்கள் என்பது நினைவிருக்கலாம்.

    English summary
    A total of 59 legends of Tamil film industry were felicitated by Tamil Nadu Chief Minister J. Jayalalitha at the centenary celebrations of Indian cinema. Gayathri Raguram who has taken upon the mantle of choreographer in films after her brief stint as an actress, vented out her displeasure on the 100th year award celebration as her family who have been part of the industry for the past 75 years were left out.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X