சன்னி லியோனுக்கே இந்த நிலைமையா? ஆடை மற்றும் மேக்கப் தரலைன்னு இப்படி புலம்பி இருக்காரே!

மும்பை: ஆபாச பட நடிகையாக சர்வதேச அளவில் கலக்கி வந்த சன்னி லியோன், அதிலிருந்து ஓய்வு பெற்று பாலிவுட்டின் கிளாமர் நடிகையாக பல ஆண்டுகளாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், நீண்ட நாட்களாக மனதிற்குள்ளே பூட்டி வைத்து புலம்பிக் கொண்டிருந்த விஷயம் பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் சன்னி லியோன் மனம் திறந்து பேசியிருப்பது ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஷாக் ஆக்கி உள்ளது.

சன்னி லியோனுக்கே இப்படியொரு நிலைமையா என அவரது ரசிகர்கள் கமெண்ட் போட்டு ஆறுதல் கூறி வருகின்றனர்.

ஆபாச பட நடிகை

ஆபாச பட நடிகை

இந்தியாவில் பிறந்த கரஞ்சித் கவுர் பெற்றோர்கள் வெளிநாட்டுக்கு வேலை விஷயமாக சென்ற நிலையில், அமெரிக்காவில் மிகப்பெரிய ஆபாச நடிகையாக சன்னி லியோனாக மாறினார். ஆபாச படங்களில் சன்னி லியோன் நடித்த காலத்தில் சர்வதேச அளவில் அவருக்கு மிகப்பெரிய பிரபலம் கிடைத்தது. ஆனால், ஒரு கட்டத்தில் இருந்து அதற்கு ஓய்வு கொடுத்து விட்டு பாலிவுட் நடிகையாக மீண்டும் இந்தியாவுக்கே வந்து செட்டில் ஆகி விட்டார்.

இங்கேயும் கிளாமர் தான்

இங்கேயும் கிளாமர் தான்

ஆபாச படங்களில் நடிப்பதை விட்டு விட்டாலும், பாலிவுட்டில் சன்னி லியோன் தொடர்ந்து கவர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் எவ்வளவு தாராளம் காட்டி நடிக்க முடியுமோ அந்த அளவுக்கு நடித்து அசத்தினார். ஷாருக்கானின் ராயீஸ் படம், நடிகர் ஜெய்யின் வடகறி உள்ளிட்ட படங்களில் குத்தாட்டம் போட்டும் கலக்கினார்.

அப்பவே ஒரு கோடி

அப்பவே ஒரு கோடி

ஓ சொல்றியா மாமா படத்தில் சமந்தா குத்தாட்டம் போட்டதற்கு எல்லாம் பல ஆண்டுகள் முன்னாடியே நடிகை சன்னி லியோன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார் என்றால் அப்போதே அவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், பாலிவுட்டில் திடீரென இளம் நடிகைகளே படு கவர்ச்சியாக பிகினி உடைகளில் நடிக்க ஆரம்பித்ததும் சன்னி லியோனின் மார்க்கெட் பெருமளவில் சரியத் தொடங்கின.

ஆடை விளம்பரங்களில்

ஆடை விளம்பரங்களில்

பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் பலரும் இந்தியாவின் ஆடை நிறுவனங்களின் விளம்பர படங்களில் நடித்துள்ளனர். ஆனால், நடிகை சன்னி லியோன் என்னதான் கூகுளில் தொடர்ந்து டாப் 1ல் தேடலில் இடம்பிடித்தாலும், ஒரு ஆடை நிறுவனம் கூட அவருக்கு டிரெஸ் கொடுத்து தங்களது விளம்பர படங்களில் நடிக்க அழைக்கவில்லையாம்.

மேக்கப் நிறுவனங்களும்

மேக்கப் நிறுவனங்களும்

அதே போலத்தான் மேக்கப் நிறுவனங்களும் இப்படியொரு கவர்ச்சி தேவதையை ஒரு சில காரணங்களுக்காக கண்டு கொள்ளாமல் அப்படியே இத்தனை நாட்களாக கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது நடிகைக்கு ரொம்பவே மன அழுத்தத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் இது தொடர்பாக பேசி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

சன்னி லியோனின் புது பிசினஸ்

சன்னி லியோனின் புது பிசினஸ்

அதன் காரணமாகவே தற்போது சொந்த நிறுவனத்தை தொடங்கி ஆடை மற்றும் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் முடிவுக்கு சன்னி லியொன் வந்து விட்டதாக தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில், கிம் கர்தாஷியன், கைலி ஜென்னர் உள்ளிட்ட பலரும் இதே போன்ற பிசினஸை செய்து தான் கொடிகட்டி பறக்கின்றனர். இந்தியாவிலும் கத்ரீனா கைஃப் தனது அழகு சாதன நிறுவனத்தை ஆரம்பித்து நயன்தாராவை எல்லாம் விளம்பரத்தில் நடிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X