நாகார்ஜூனா குடும்பத்திற்கு மருமகளாகும் கோட் பட நடிகை? மீனாட்சி சௌத்ரி கொடுத்த விளக்கம்!

சென்னை: மாடல் அழகியான மீனாட்சி சௌத்ரி 1997 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி ஹரியானாவில் பிறந்தார். இவர் மறைந்த கர்னல் பி.ஆர். சவுத்ரியின் மகள் ஆவார். பல் மருத்துவரான இவர், மாநில அளவிலான பேட்மிண்டன் வீராங்கனையாக பல போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர், 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 'ஃபெமினா மிஸ் இந்தியா' மற்றும் 'மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல்' ஆகிய இரு போட்டிகளிலும் கலந்து கொண்டு முதல் ரன்னர்-அப் பட்டங்களை வென்று அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

இவர், 2019ஆம் ஆண்டு வெளியான 'அவுட் ஆஃப் லவ்' என்ற இந்தி வலைத்தொடர் மூலம் திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கிய இவர், 'இச்சட்டா வாகனம் நிலுபராது', 'கிலாடி', மற்றும் 'ஹிட்: தி செகண்ட் கேஸ்' போன்ற தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து, தமிழில் விஜய் ஆண்டனி நடித்த திரில்லர் திரைப்படமான கொலை படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். பின் ஆர்.ஜே.பாலாஜி உடன் சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்தார். இதன் பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான கோட் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, லைலா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் விஜய், அப்பா, மகன் என இரண்டு விதமான ரோலில் நடித்திருந்த நிலையில், மீனாட்சி சௌத்ரி மகனுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி என்கிற ரோலில் நடித்திருந்தார். ஆனால், அந்த படத்தில் ஒப்புக்கு ஒரு பாடலுக்கும், ஒரு சில காட்சியில் மட்டுமே வந்து ஆட்டம் போட்டு இருந்தார் மீனாட்சி சௌத்ரி.

meenakshi chaudhary wedding rumours
Photo Credit:

நடிகை மீனாட்சி சௌத்ரி: அந்த படத்தை தொடர்ந்து துல்கல் சல்மானுடன் இணைந்து நடித்த லக்கி பாஸ்கர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான சங்கராந்திகி வாஸ்துனம் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து இருந்தார். இந்த படமும் அதிக வசூலை அள்ளியதால், தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாது நடிகையாக மாறி இருக்கும் மீனாட்சி சௌத்ரி, பல முன்னணி நடிகைகளைப் போல தனது பெயரில் சிறிய மாற்றத்தை செய்துள்ளார். அதன்படி Meenakshi என்ற பெயரில் Meenaakshi என கூடுதலாக ஒரு 'A' வை சேர்த்து இருக்கிறார்.

திருமண வதந்தி: இந்நிலையில், நடிகை மீனாட்சி சௌத்ரி திருமணம் குறித்த வதந்தி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதாவது, மீனாட்சி சௌந்திரி, நாகார்ஜுனாவின் மருமகனான சுஷாந்த் அணுமோலுவை காதலித்து வருவதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் இணையத்தில் பரவின. இதற்கு விளக்கம் கொடுத்த நடிகை மீனாட்சி சௌத்ரி, தனக்கும் சுஷாந்துக்கும் இடையே எந்தவித நிச்சயதார்த்தமும் நடைபெறவில்லை, நாங்கள் காதலிக்கவும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த மாதம் தமிழ் நடிகர் ஒருவரின் மகனுடன் எனக்குத் திருமணம் என்று ஒரு வதந்தி பரவியது. ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய புதிய வதந்தி பரவிக்கொண்டு தான் இருக்கிறது. இதனால், வதந்தி பற்றி நான் கவலைப்படுவதில்லை. நான் என் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் தகவல்கள் மட்டுமே உண்மை. இணையத்தில் பரவிய தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்திகளே, அதில் உண்மை இல்லை என்றார்.இதன் மூலம் சுஷாந்துடனான தனது திருமண வதந்திகளுக்கு மீனாட்சி சௌத்ரி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X