»   »  வருகிறார் கோபிகாவின் தங்கை

வருகிறார் கோபிகாவின் தங்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொன்னியின் செல்வன் என்ற படத்தில் ரவிகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் கோபிகா.

பொன்னியின் செல்வன் தமிழ் வாசகர்களுக்கு மறக்க முடியாத நாவல். கல்கியின் காவியப் படைப்பான இந்த நாவலை திரைப்படமாக்கபலர் முயன்றனர்.

எம்ஜிஆர் இந்த நாவலுக்குத் திரைக்கதை எழுதும்படி இயக்குனர் மகேந்திரனிடம் (அப்போது அவர் கதை-வசனகர்த்தா) கேட்டதும்,முக்கால்வாசி திரைக்கதை முடிந்த நிலையில் அந்த முயற்சி அப்படியே கைவிடப்பட்டதும் தமிழ் சினிமா ரசிர்களுக்குத் தெரிந்ததே.

பின்னர் கமல் கூட இந்த நாவலை சினிமாவாகத் தயாரிக்கும் யோசனையில் இருந்ததாக தகவல் பரவியதுண்டு. ஆனால் கடைசி வரைஇந்த நாவல் திரைக்கு வராமலே போனது மட்டும்தான் சோகமான நிஜம்.

இந் நிலையில் பொன்னியின் செல்வன் என்ற பெயரில் ஒரு படம் தயாராக உள்ளது. அழகிய தீயே இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில்உருவாகும் இந்தப் படத்தில் கதாநாயகனாக ரவிகிருஷ்ணாவும், கதாநாயகியாக கோபிகாவும் நடிக்கின்றனர்.

பெயர்தான் பொன்னியின் செல்வனே தவிர, இந்தப் படத்திற்கும் நாவலுக்கும் துளி கூட சம்பந்தமில்லையாம் (அப்புறம் எதுக்கு முதல் 4பாரா என்கிறீர்களா? ச்சும்மா...விஷய ஞானத்துக்கு) புகழ்பெற்ற பெயர்களை படத்திற்குத் தலைப்பாக வைத்தால், மக்கள் மனதில் எளிதாகஅந்தப் படம் போய்ச் சேரும் என்ற எண்ணம்தான் இதற்குக் காரணமாம்.

அழகிய தீயே படத்தின் வெற்றிக்குப் பிறகு அதே டீம் மீண்டும் ஒரு படம் பண்ணுவதாகக் கூறப்பட்டது. ஆனால் ஏதாவது ஒரு இயக்குனர்தனது முதல்படத்தை வெற்றிப்படமாக்கி விட்டால், அவரது இரண்டாவது படத்தை எப்பாடுபட்டாவது தனது பேனரில் தயாரிக்கும்தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் இந்த ராதாமோகனையும் விடவில்லை.

அழகிய தீயே படத்தைப் பார்த்து அசந்துபோன ஜோதிகிருஷ்ணா (எனக்கு 20 உனக்கு 18 பட இயக்குனர்) தனது அப்பா ஏ.எம்.ரத்னத்திடம்அதைப் பற்றி சொல்ல, அவர் ராதாமோகனை வளைத்துப் போட்டுவிட்டார்.

தனது இரண்டாவது மகன் ரவி கிருஷ்ணாவையே (7 ஜி ரெயின்போ காலனி ஹீரோ) படத்தில் ஹீரோவாகவும் ஆக்கிவிட்டார். ஹீரோயின்கறுப்பழகி கோபிகா தான்.

அழகிய தீயே படத்தைப் போலவே இந்தப் படமும் எவ்வித ஆபாசமும் இல்லாத டீஸண்ட்டான படமாக இருக்கும் என்று ராதாமோகன்உறுதி கூறுகிறார். விரைவில் படப்பிடிப்பைத் தொடங்கவிருக்கிறார்கள்.


தற்போது தொட்டி ஜெயா, கனாக் கண்டேன் ஆகிய படங்களில் நடித்து வரும் கோபிகா தமிழில் ரொம்ப பிஸியான நடிகையாகிவிட்டார்.

அவரால் கால்ஷீட் தந்து மாளவில்லை. இதனால் தங்கையையும் களத்தில் இறக்கிவிட திட்டமிட்டிருக்கிறாராம். அவரது பெயர் க்ளினி. ஒருவிழாவிற்கு கோபிகாவுடன் இவரும் வந்திருந்தார். கோபிகாவைவிட கன கச்சிதமான லுக்குடன் இருந்த க்ளினி அன்று முதல்கோலிவுட்டில் ஒரு கூட்டம் விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது.

முதலில் சுக்ரன் படத்தில் ரவிகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிக்கக் கூப்பிட்டார்கள். அடுத்து சுசி.கணேசன் இயக்கத்தில் சக்கர படத்தில்பிரசாந்த்திற்கு ஜோடியாக நடிக்க அழைத்தார்கள். இதற்கெல்லாம் நோ என்பதுதான் பதிலாக அமைந்தது.

இப்போது பாலா இயக்கத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கக் கேட்டிருக்கிறார்கள். கேட்பது பாலா என்பதால் கோபிகா வீட்டில் யோசிக்கத்தொடங்கியிருக்கிறார்களாம்.

தற்போது பிளஸ்டூ படித்து வரும் க்ளினி, பரிட்சை முடிந்ததும் ஏப்ரலில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆமா, க்ளினி என்றால் என்ன அர்த்தம்?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil