twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ட்விட்டரை காலி பண்ணுங்க.. சொந்தமா ஒரு சோசியல் மீடியா தளத்தை நாம உருவாக்கணும்.. 'தலைவி' கோரிக்கை!

    By
    |

    மும்பை: ட்விட்டரை மூடிவிட்டு புதிய சமூக வலைத்தளத்தை உருவாக்கும் வழியை இந்திய கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார், கங்கனா ரனவ்த்.

    Recommended Video

    Full Video: Quarantine Dance | Sayyeesha, Jhanvi Kapoor, Jwala Gutta, Mahima Nambiar

    தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்திருந்தவர், பிரபல இந்தி நடிகை கங்கனா ரனவத்.

    இப்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையான 'தலைவி'யில் நடித்து வருகிறார். இதை விஜய் இயக்குகிறார்.

    பிரேக்கிங் நியூஸ்.. பேப்பர் டிரெஸ் த்ரோபேக் போட்டோவை போட்டு இன்ஸ்டாவை சூடேற்றும் பிரபல நடிகை!பிரேக்கிங் நியூஸ்.. பேப்பர் டிரெஸ் த்ரோபேக் போட்டோவை போட்டு இன்ஸ்டாவை சூடேற்றும் பிரபல நடிகை!

    3 விருதுகள்

    3 விருதுகள்

    இந்தி சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே, தனு வெட்ஸ் மனு, ஃபேஷன், குயின் ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருதுகளை பெற்றவர் கங்கனா. இவர் சகோதரி ரங்கோலி சண்டல். கங்கனாவும் அவரது சகோதரி ரங்கோலியும் பாஜக ஆதரவாளர்கள். ரங்கோலி, அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவிடுவது வழக்கம்.

    சர்ச்சை கருத்து

    சர்ச்சை கருத்து

    சில சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு கடும் விமர்சனத்துக்கு உள்ளாவதும் நடக்கும். இந்நிலையில் இப்போது அவர் பதிவிட்ட கருத்து ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது. மொராதாபாத்தில் கொரோனா வைரஸ் சோதனைக்காகச் சென்ற சுகாதாரத்துறை பணியாளர்கள், காவலர்கள் தாக்கப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

    கடும் கண்டனம்

    கடும் கண்டனம்

    இதுகுறித்து ரங்கோலி கடுமையாக விமர்சித்து ட்விட் செய்திருந்தார். அதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் தாக்கிப் பதிவிட்டதாக, புகார் எழுந்தது. இதையடுத்து சினிமா பிரபலங்கள், நெட்டிசன்கள் அவரது ட்விட்டுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். அவர்கள் அளித்த புகாரை அடுத்து ரங்கோலியின் கணக்கை ட்விட்டர் நிறுவனம் சஸ்பெண்ட் செய்தது.

    நாஜிப்படை

    நாஜிப்படை

    ரீமா காக்தி என்ற பெண் இயக்குனர், இந்த ட்வீட்டுக்காக ரங்கோலியை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். பிரபல பாலிவுட் ஆபரண வடிவமைப்பாளர் ஃபாரா கான், 'கணக்கை முடக்கியதற்கு நன்றி. குறிப்பிட்ட சமூகத்தை அவர் தாக்கியதோடு, அவர்களைச் சுட்டுத்தள்ள வேண்டும் எனக் கூறி தன்னை நாஜிப்படைகளோடு ஒப்பிட்டிருந்தார். இதனால் ட்விட்டர் நிர்வாகத்திடம் புகார் அளித்தேன்' என்று கூறி இருந்தார்.

    கங்கனா ரனவ்த்

    பலரும் ரங்கோலிக்கு எதிரானக் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தனது சகோதரிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார் கங்கனா. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், என் சகோதரி டாக்டரையும் போலீசாரையும் தாக்கியவர்களைச் சுட்டுக்கொல்ல வேண்டும் என்றுதான் அந்த ட்விட்டரில் கூறியிருந்தார்.

    மன்னிப்புக் கேட்போம்

    மன்னிப்புக் கேட்போம்

    பாரா கானும் ரீமாவும் என் சகோதரி மீது தவறான குற்றச்சாட்டை வைத்துள்ளனர். எந்த சமூகத்துக்கு எதிராகவும் அவர் கருத்துச் சொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தால், நாங்கள் இருவருமே மன்னிப்புக் கேட்போம் என்று கூறியுள்ளார். பின்னர், இந்தியா, ட்விட்டர் தளத்தை மூடிவிட்டு, நம் நாட்டுக்குச் சொந்தமாக ஒரு சமூக வலைத்தளத்தை உருவாக்கும் வழியை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    English summary
    Kangana Ranaut has come to her sister Rangoli Chandel’s defence by asking the Indian government to shutdown Twitter, and that India should find a way to start its own social media platform.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X