»   »  எல்லாரும் திருஷ்டிப் பொட்டை கன்னத்துல வைப்பாங்க.. ஆனா ஹன்சிகாவுக்கு..?

எல்லாரும் திருஷ்டிப் பொட்டை கன்னத்துல வைப்பாங்க.. ஆனா ஹன்சிகாவுக்கு..?

Posted By:
Subscribe to Oneindia Tamil

வெண்ணையில் செய்த பொம்மை போலிருக்கிறார் ஹன்சிகா. இப்படியெல்லாம் ஆராதிக்கக்கூடிய ஒரு அழகு கிடைத்தால், அதை ஸ்கிரீனுக்குள் முழுமையாக கொண்டு வந்து ஊர் உலகத்தையே மெய் மறக்க வைப்பதுதானே ஒரு டைரக்டருக்கு அழகு? அந்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.ராஜசேகர். அவர் இயக்கியிருக்கும் ‘உயிரே உயிரே' படத்தில் ஹன்சிகாதான் ஹீரோயின். அவருக்கு ஜோடியாக பிரபல நடிகையான ஜெயப்ரதாவின் மகன் சித்து அறிமுகம் ஆகியிருக்கிறார்.

இளமையும் காதலும் வழிந்தோடுகிற இப்படத்தில் "ஜோடின்னா இப்படியிருக்கணும்டா..." என்று எல்லா இளசுகளையும் ஏங்க வைப்பது மாதிரி நடித்திருக்கிறார்களாம் இருவரும்.


Hansika - Sindhu's Uyire Uyire releasing soon

கதை இதுதான்... மும்பை டூ சென்னை பிளைட், வழியில் கோவாவில் இறங்குகிறது. அங்குதான் பிரண்ட்ஷிப் காதலாகிறது இருவருக்குள்ளும். அந்த காதலை ஒரு டூயட்டில் சொல்லிவிட்டு போகாமல், இஞ்ச் பை இஞ்ச் ரசிகர்களின் மனதில் மழைத்தூறல் போல இறக்கி வைத்திருக்கிறாராம் ஏ.ஆர்.ராஜசேகர்.


அதற்கு ஒரு சாம்பிள் காட்சி இதோ...


திடீரென ஒரு திருமண நிகழ்ச்சிக்கு செல்கிறார்கள் இருவரும். அதுவரையும் மாடர்ன் டிரஸ்சில் இருக்கும் ஹன்சிகாவை பட்டுப்புடவை கட்டிக் கொண்டு வரச்சொல்கிறார் சித்து. அவரது விருப்பத்தை நிறைவேற்றுகிற ஹன்சிகா, புடவை, தலை நிறைய மல்லிகைப்பூ சகிதம் அந்த மண்டபத்திற்குள் நுழைய, அப்படியே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார் சித்து. அதே நேரம் அந்த கல்யாண மண்டபத்திலிருக்கிற ஐயாயிரம் கண்களும் ஹன்சிகாவை விழுங்க, அதற்கப்புறம் சித்துவுக்கு புரிகிறது. ஹன்சிகாவை தான் மட்டும் சைட் அடிக்கவில்லை. ஒட்டுமொத்த ஆண் வர்க்கமே சைட் அடிக்கிறது என்று.


Hansika - Sindhu's Uyire Uyire releasing soon

ஐயோ... தன் காதலிக்கு கண் பட்டால் என்னாவது என்று ஓடோடி வரும் சித்து, தன் கை விரலால் ஹன்சிகாவின் கண் மையிலிருந்து கொஞ்சத்தை தொட்டு எடுத்து... கன்னத்தில் வைப்பார் என்றுதானே நினைப்பீர்கள்? அதுதான் இல்லை. அப்படியே மெல்ல
இறங்கி...
இறங்கி...
இறங்கி...


பச்சக்கென்று அவரது வெண்ணையாய் மின்னும் இடுப்பில் வைக்கிறார். திருஷ்டிப் பொட்டை ஏன் அங்கு வைத்தார் என்று கேட்பவர்களுக்கு... எல்லாருடைய கண்களும் அதற்கு முன்பு அங்குதானேய்யா இருந்தது?


Hansika - Sindhu's Uyire Uyire releasing soon

ம்... தாறுமாறா லவ் வந்தால் இப்படியெல்லாம்தான் யோசிக்க தோணும்!

English summary
Hansika is pairing up with actress Jayapradha's son Sidhu in Uyire Uyire and the movie will be released soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil