»   »  ஹா.. ாரிகா....

ஹா.. ாரிகா....

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருமணத்துக்கு முன் தவறான பெண்களிடம் செல்லும் வாலிபர்கள் திருமணத்துக்குப் பின் சந்திக்கும் பிரச்சனைகளை முன் வைத்துகாமசூத்ரா பாணியில் எடுக்கப்பட்ட தெலுங்குப் படம் இப்போது டப் செய்யப்பட்டு தமிழுக்கு வருகிறது.

படத்தின் பெயர் அறியாத பசங்க.

தெலுங்கில் சோக்காடி சர்தலு என்ற பெயரில் தியேட்டர்களில் சூட்டைக் கிளப்பிய படம் தான் இப்போது தமிழில் மொழி மாற்றம்செய்யப்பட்டு வருகிறது. ஆந்திராவில் 50வது நாளைத் தாண்டியும் வசூலை வாரிக் கொண்டிருக்கிறது இந்தப் படம். இத்தனைக்கும்படத்தில் பெரிய ஹீரோ, ஹீரோயின் யாருமில்லை.

கதை.. ஸாரி.. சதையை நம்பியே எடுக்கப்பட்டுள்ள படம் இது. கிளுகிளு நகைச்சுவைப் படம் இது. நீங்க நினைக்கிற மாதிரி மலையாள பிட்படம் மாதிரியெல்லாம் இல்லை என்கிறார் இதை டைரக்ட் செய்த இயக்குனர் பாபு.

இளைஞர்களை தியேட்டர்களுக்கு இழுக்கத் தான் டைட்டிலை இப்படி வைத்திருக்கிறோமே தவிர படத்தில் அவசியமான இடங்களில்மட்டுமே ஹாரிகாவை களமிறங்கியுள்ளார் என்கிறார்.

ஆனால், வாய்ப்பு கிடைத்த இடத்தில் எல்லாம் ஹாரிகா தாராளமாகக் கருணை காட்டி ரசிகர்களை குளிர்வித்திருக்கிறாராம்.

புதுமுகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு ஹாரிகா ஒளிவு மறைவில்லாமல் நடித்துக் கலக்கியிருக்கிறார்.

நண்பன் ஒருவனின் முதலிரவு தோல்வியில் முடிய அது விவகாரத்தில் போய் முடிகிறதாம். இதைப் பார்த்த அவனது நண்பர்கள் முன்அனுபவத்துக்காக போகக் கூடாத பெண்களிடம் போய் மாட்டிக் கொண்டு பின்னர் கல்யாணத்துக்குப் பின் முழிப்பதே கதையாம்.

இதில் நடிக்கும் ஹாரிகா ஆந்திராவைச் சேர்ந்தவர். கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த பெண்ணான ஹாரிகா, தான் பார்த்து வந்த சாப்ட்வேர்வேலையை உதறிவிட்டு நடிப்புக்கு வந்துவிட்டார். இங்கே உடைகளை உதறிவிட்டு நடித்திருக்கிறார்.

ஹாரிகாவைப் போலவே மேலும் சில படா படா பார்ட்டிகளும் படத்தில் உண்டாம்.

இந்தப் படத்தை முடித்துவிட்டு இதே பாணியில் அடுத்து ஒரு தெலுங்குப் படத்திலும் ஹாரிகா பிஸியாகிவிட்டார். தமிழில் இந்தப் படம்வெளியானால் தனக்கு இங்கும் சில படங்கள் புக் ஆகும் என்று நம்பி இப்போதே மீடியேட்டர் ஒருவரையும் கோலிவுட்டில் பிடித்துவைத்துவிட்டார் ஹாரிகா.

ம்ம்ம்.. ரொம்ப பாஸ்ட் தான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil