»   »  10 மணி நேரம் நீரில் மிதந்த ஹரிப்ரியா... திடீரென்று மூழ்கினார்.. அதர்வணம் ஷூட்டிங்கில் பரபரப்பு!

10 மணி நேரம் நீரில் மிதந்த ஹரிப்ரியா... திடீரென்று மூழ்கினார்.. அதர்வணம் ஷூட்டிங்கில் பரபரப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிலந்தி பட இயக்குநர் ஆதிராமின் அதர்வணம் படப்பிடிப்பில், சுமார் 10 மணி நேரம் நீரில் மிதந்தபடி இருந்த நாயகி ஹரிப்பிரியா திடீரென நீரில் மூழ்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்த் திரையுலகம் டிஜிட்டல் மயமாக மாறுவதற்கு முழுமையாக அடித்தளம் அமைத்துத் தந்த படம் ‘சிலந்தி'. இப்படத்தை ஆதிராம் எழுதி இயக்கி இருந்தார்.

இவர் தற்போது தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் இயக்கி வரும் மிரட்டலான த்ரில்லர் படம் ‘அதர்வணம்'.

இந்த படத்தை ஆர். மனோஜ்குமார் யாதவ் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரியா ரமேஷ் வழங்க, எஸ்.ரமேஷ் ‘ரணதந்த்ரா‘ என்ற பெயரில் கன்னடத்தில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.

விஜயராகவேந்திரா...

விஜயராகவேந்திரா...

கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்த டாக்டர் ராஜ்குமாரின் மருமகன் விஜயராகவேந்திரா இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

தேசிய விருது பெற்றவர்...

தேசிய விருது பெற்றவர்...

சென்னை திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்ற இவர் நடிக்கும் 37-வது படம் இது. இவர் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாயகியாக ஹரிப்பிரியா...

நாயகியாக ஹரிப்பிரியா...

இப்படத்தின் நாயகியாக ஹரிப்பிரியா நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே தமிழில் வல்லக்கோட்டை, கனகவேல் காக்க, முரண், வாராயோ வெண்ணிலாவே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஆதிராம்...

ஆதிராம்...

அதர்வணம் படத்தின் கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்குவதுடன், தனது டிஜிட்டல் தியேட்டர்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் இந்தப்படத்தை பிரமாண்டமாகத் தயாரித்து வருகிறார், ஆதிராம். சென்னை, பெங்களூர், மைசூர், ஷிமோகா, கோவா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

திக் திக் காட்சிகள்...

திக் திக் காட்சிகள்...

ஒரு காதல் ஜோடியின் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத சம்பவங்கள், அவர்களை மரணத்தின் பிடியில் சிக்க வைக்கிறது, அந்த சூழ்நிலையில் இருந்து அவர்கள் தப்பினார்களா, இல்லையா என்பதைத் தான் விறுவிறுப்பு குறையாமல் அதர்வணம் படத்தில் காட்சிகளாக்கி இருக்கிறார்களாம்.

கவர்ச்சியில் மிரட்டல்...

கவர்ச்சியில் மிரட்டல்...

நாயகனும், நாயகியும் பல காட்சிகளில் உயிரைப் பணயம் வைத்து நடித்திருக்கிறார்களாம். அதிலும் குறிப்பாக நாயகி ஹரிப்ரியா நடிப்பிலும், கவர்ச்சியிலும் மிரட்டியிருக்கிறாராம்.

குளியல் காட்சி...

குளியல் காட்சி...

இந்நிலையில், பெங்களூருவுக்கு அருகே நீச்சல் குளத்தில் ஹரிப்பிரியா குளித்து விளையாடுவது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டதாம். சுமார் 6 மணிநேரம் படமாக்கப்பட்ட இந்தக் காட்சிக்காக, 10 மணி நேரம் நீச்சல் உடையில் குளிரில் நடுங்கியவாறு தண்ணீரில் மிதந்துள்ளார் ஹரிப்பிரியா.

நீரில் மூழ்கிய நாயகி...

நீரில் மூழ்கிய நாயகி...

படப்பிடிப்பு முடிய இருந்த வேளையில் திடீரென 12 ஆழம் கொண்ட பகுதியில் தண்ணீரில் மூழ்கி விட்டாராம் ஹரிப்பிரியா. விபரீதத்தை உணர்ந்த படக்குழுவினர் விரைந்து செயல்பட்டு அவரைக் காப்பாற்றியுள்ளனர்.

அம்மா தகராறு...

அம்மா தகராறு...

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஹரிப்பிரியாவின் தாயார் இயக்குநரின் சண்டை போட்டுள்ளார். ஆனால், நீரில் இருந்து வெளியே வந்த ஹரிப்பிரியா, நீண்ட நேரம் நீந்தியதால் களைப்பில் மூழ்கிவிட்டதாக சமாதானம் தெரிவித்துள்ளார்.

உரிய பலன் கிடைக்கும்...

உரிய பலன் கிடைக்கும்...

ஏற்கனவே இந்தப்படத்திற்காக இரண்டு முறை இரத்த காயம் அடைந்ததாகக் கூறிய ஹரிப்பிரியா, நிச்சயம் தனது உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும் என தாயாரைச் சமாதானம் படுத்தியுள்ளார். பின்னர் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி, குளியல் காட்சி படமாக்கப்பட்டதாம்.

English summary
After Silanthi, director Aadhiram is making his second movie titled Adharvanam in Tamiland Kannada.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil