»   »  என்னை கறித்துண்டு போன்று விற்கப் பார்த்தார்: விஷாலிடம் கொந்தளித்த அமலா பால்

என்னை கறித்துண்டு போன்று விற்கப் பார்த்தார்: விஷாலிடம் கொந்தளித்த அமலா பால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னை கறித்துண்டு போன்று விற்கப் பார்த்தார் என்று அமலா பால் அழகேசன் பற்றி ட்விட்டரில் விஷாலிடம் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் நடக்கும் கலை நிகழ்ச்சியில் ஆடுவதற்காக சென்னை தி. நகரில் உள்ள ஸ்ரீதர் மாஸ்டரின் ஸ்டுடியோவில் நடன பயிற்சியில் ஈடுபட்ட தனக்கு தொழில் அதிபர் அழகேசன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்தார் என போலீசில் புகார் அளித்தார் அமலா பால்.

அவரின் புகாரின்பேரில் போலீசார் அழகேசனை கைது செய்தனர்.

வாழ்த்து

வாழ்த்து

பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது தைரியமாக போலீசில் புகார் அளித்த அமலா பாலை பாராட்டி ட்வீட் போட்டார் விஷால். அதற்கு அமலா பால் தற்போது நன்றி தெரிவித்துள்ளார்.

வியாபாரம்

எனக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி விஷால். அந்த நபர் என்னை கறித்துண்டை போன்று வியாபாரம் செய்யப் பார்த்தார். அவரின் துணிச்சல் எனக்கு எரிச்சலாக இருந்தது என்று அமலா ட்வீட்டியுள்ளார்.

போலீஸ்

போலீஸ்

மலேசியாவில் கலை நிகழ்ச்சியை முடித்த பிறகு தனி நபர் ஒருவரின் பண்ணை வீட்டில் நடக்கும் பார்ட்டியில் கலந்து கொள்ள அமலா பால் சம்மதம் தெரிவித்திருந்தார். அதை உறுதிபடுத்திவிட்டு வருமாறு என்னை அனுப்பினார்கள் என அழகேசன் போலீசாரிடம் தெரிவித்தார்.

ரயில்

ரயில்

ரயிலில் பயணம் செய்த நடிகை சனுஷாவுக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தார். அந்த நபரின் கையை முறுக்கி போலீசில் பிடித்துக் கொடுத்தார் சனுஷா என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Amala Paul tweeted that, 'Thank you Vishal for standing by me and assuring me that I must not let it go, and I didn’t, now I believe it’s every woman’s duty, to not let it go and stand for themselves. He was ready to trade me off like a meatloaf, his guts make me sick, his existence makes me sick #MeToo'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil