»   »  மாளவிகா.. மீண்டும் ஹீரோயின்

மாளவிகா.. மீண்டும் ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

ஒரு வழியாய் மீண்டும் தமிழில் ஹீரோயின் ரோலை எட்டிப் பிடித்துள்ளார் மாளவிகா.

ஸ்வேதா கொன்னூர் என்ற சொந்தப் பெயருடன் டாபர் வாடிகா ஹேர் ஆயிலில் ஆரம்பித்து, பேர்னஸ் கிரீம், பிரிட்டானியா பிரட்என விளம்பரப் படங்களில் நடித்தவாரே, பெயரை மாற்றிக் கொண்டு சினிமாவுக்குள் வந்தவர் மாளவிகா.

தமிழில் 10 படங்கள், தெலுங்கில் 7, சொந்த மொழியான கன்னடத்தில் 2, மலையாளத்தில் ஒரு படம் என நடித்து முடித்தமாளவிகாவுக்கு தென்னகத்தில் எங்கும் வாய்ப்பில்லாமல் போனதால் மீண்டும் மும்பையில் குடியேறி விளம்பரங்களில் நடித்தார்.

ஒரு ரஷ்ய சூயிங்கம்முக்கு கெட்ட போஸ் கொடுத்து நடித்தார் மாளவிகா. அப்படியே சில கேலண்டர்களுக்கும் உடலைக்காட்டிவிட்டுப் பார்த்தால், விளம்பரப் படங்களும் நின்று போயிருந்தன.

வெறுத்துப் போன கமலிடம் வந்து கொஞ்சியதில் வசூல்ராஜாவில் ஒரு சின்ன ரோலும் கை நிறைய காசும் கிடைத்தது. அப்படியேசரத்குமாரை வளைத்து இரு படங்களில் சிங்கிள் டான்ஸ் ஆட வாய்ப்பு வாங்கினார். ஆனால், ஹீரோயின் சான்ஸ் என்னமோபடியவேயில்லை.

இதையடுத்து மீண்டும் தெலுங்குக்குப் போய் கிளாமரில் குதித்தார். ஆனால், அங்கு ஹீரோ கேமரா முன்பே கூடாத வேலையைசெய்துவிட அதிர்ந்து போன மாளவிகா தெலுங்கை விட்டே தூர வந்துவிட்டார்.

சொந்த ஊரான பெங்களூர், மாடலிங்குக்காக தாற்காலிகமாக குடியேறிய மும்பை இரண்டுக்கும் கும்பிடி போட்டுவிட்டுதொடர்ந்து சென்னையிலேயே தங்கிய மாளவிகா சான்ஸ் வேட்டையில் தீவிரமாக இறங்கினார்.

ரஜியை சந்தித்து கன்னடத்திலேயே மாத்தாடி ஒரு வழியாக சந்திரமுகியில் சின்ன ரோலைப் பிடித்தார்.

இதைத் தொடர்ந்து மாளவிகா நடத்திய பிரம்மப்பிரயத்தனம் காரணமாக ஹீரோயின் ரோல் சிக்கிவிட்டது.

படத்தின் பெயர் மனச் சிறகினிலே.. அழகான தமிழ்ப் பெயரில் அழகான ஒரு காதல் கதையை எடுக்கிறார்களாம்.

இதில் எப்படி சான்ஸ் பிடித்தார் என்கிறார்களா? எல்லாம் கன்னட தொடர்புகள் மூலமாகத் தான். இதில் ஹீரோவாக நடிக்கப்போவது பெங்களூரைச் சேர்ந்த மிதுன் ஜேதஸ்வி (தமிழுடன் இந்த தேஜஸ்வி ஒட்டாமல் தனியே நின்றதால், அதைவெட்டிவிட்டுவிட்டு மிதுன் ஆகிவிட்டார்).

இவர் ஒன்றும் புதியவரல்ல. கும்மாளம், ஆஹா எத்தனை அழகு ஆகிய பிளாப் படங்களில் நடித்தாரே. அவரே தான்.

இந்தப் படத்தில் ஹீரோயினாக முதலில் சக்ஸஸ் பட நாயகி நந்தனாவைத் தான் புக் செய்தார்கள். ஆனால், மாளவிகா தனதுதிறமையை எல்லாம் காட்டி இந்த வாய்ப்பைப் பிடித்துவிட்டார். இருந்தாலும் நந்தனாவும் செகண்ட் ஹீரோயினாக நடிக்கிறார்.

படத்தை இயக்குவது புதுமுக டைரக்டரான ஹரிபிரசாத். கதை. திரைக்கதை, வசனத்தையும் இவரே கவனிக்கப் போகிறாராம்.

இந்தப் படம் வெளியானால் தமிழில் மீண்டும் நிச்சயம் ஒரு ரவுண்டு ஹீரோயினாக வலம் வருவேன் என்கிறார் மாளவிகா.

ரேவதி மாதிரி ரோல்கள் செய்யத் தான் சினிமாவுக்கு வந்தேன். சான்ஸ் இல்லாமல் போனதால் கவர்ச்சி முத்திரை குத்தி இப்படிஆக்கிவிட்டார்கள். ஒரு பாட்டுக்கு ஆடவே அழைக்கிறார்கள். அநியாய கவர்ச்சி காட்ட வைக்கிறார்கள் என்று வருத்தப்படுகிறார்மாளவிகா.

இருந்தாலும் இந்த மாதிரி ரோல்களை விட்டுவிடவும் மாளவிகா தாயராக இல்லை. கலைப்புலி தாணு தயாரிக்கும் ஒரு படத்திலும்,பிரஷாந்த் நடிக்கும் ஒரு படத்திலும், சந்துரு என்ற படத்திலும் சின்னச் சின்ன கவர்ச்சியுடன் கூடிய டான்ஸ் ஆடும் ரோல்களைவாங்கியிருக்கிறார் மாளவிகா.

கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை...!!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil