Just In
- 42 min ago
என் வீட்டு கப்போர்டில் எலும்புக்கூடுகள் இல்லை.. நான் ஏன் பயப்பட வேண்டும்.. டாப்ஸி அதிரடி!
- 1 hr ago
தங்கச் சிலையே தோற்றுப் போகும் அழகு…முன்னணி நடிகையை வர்ணிக்கும் ரசிகர்கள்!
- 1 hr ago
தோட்டாக்களை தெறிக்க விட்டு தல அஜித்… துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று சாதனை !
- 1 hr ago
பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்…. அருண்பாண்டியன் சிறப்பு பேட்டி
Don't Miss!
- News
"அது"தான் பிரச்சினையா இருக்காம்.. புதுவையில் பாஜகவால் ஆட்சியமைக்க முடியுமா?
- Education
UPSC 2021: ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! யுபிஎஸ்சி அறிவிப்பு!!
- Finance
ஆன்லைனில் எப்படி ஆதார் முகவரி மாற்றம் செய்வது..!
- Sports
பெண்களுக்கு உயிரை சுமக்கும் வாய்ப்பை கடவுள் கொடுக்க காரணம்... விராட் கோலி சிலிர்ப்பு
- Lifestyle
யாரெல்லாம் பேரீச்சை பழம் சாப்பிடக்கூடாது தெரியுமா? இந்த நேரத்தில் பேரீச்சை சாப்பிடுவது நல்லதல்ல...!
- Automobiles
சிஎன்ஜி வெர்சனில் தயாராகும் ஸ்கோடா ரேபிட் செடான் கார்!! சோதனையில் இருப்பதாக தகவல்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சினிமா எனக்கு துரோகம் செய்துவிட்டது... ஆனால், மீண்டு வருவேன்...' பிரபல ஹீரோயின் பரபரப்பு புகார்
சென்னை: இந்தி சினிமா தனக்குத் துரோகம் இழைத்துவிட்டது என்று பிரபல நடிகை புகார் கூறியுள்ளார்.
தமிழில் விஷால் ஜோடியாக, தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் நடித்தவர் தனுஶ்ரீ தத்தா. இந்தியில் சில படங்களில் நடித்திருந்த தனுஶ்ரீ, 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடிக்கவில்லை. சினிமாவை விட்டு ஆன்மீகம் பக்கம் சென்றார்.
தலையை மொட்டை அடித்து ஆளே மாறி இருந்தார். சிறிது காலம் அமைதியாக இருந்த அவர், கடந்த சில வருடங்களுக்கு முன், மீ டு புகார் மூலம் வெளிச்சத்துக்கு வந்தார்.

நடிகர் நானா படேகர்
இவர், ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்ற இந்தி படத்தில் நடித்தபோது, நடிகர் நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும் இதுகுறித்து வெளியே சொன்னதால் அவர் ஆதரவாளர்கள் மிரட்டினார்கள் என்றும் குடும்பத்தோடு சென்றபோது தாக்கப்பட்டேன் என்றும் கூறியிருந்தார். இந்த மீ டூ புகார், பரபரப்பை பாலிவுட் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

வழக்குத் தாக்கல்
நானா படேகர், தமிழில் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம், ரஜினியின் காலா படங்களில் நடித்தவர். இதையடுத்து இந்தி நடிகர், நடிகைகள் சிலர் தனுஸ்ரீக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். பின்னர் நானா படேகர் மீது, மும்பை ஓஸிவாரா போலீஸ் நிலையத்தில் தனுஶ்ரீ புகார் அளித்தார். போலீசார் விசாரித்தனர். பின்னர் நானா படேகருக்கு எதிராக தேவையான சாட்சியங்கள் இல்லாததால், விசாரணையை தொடர முடியவில்லை என கூறி முடித்துவிட்டனர்.

கணேஷ் ஆச்சார்யா
இதை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்துள்ளார் தனுஶ்ரீ தத்தா. இதையடுத்து தனுஶ்ரீ மீது, நானா படேகரின் அமைப்பு சார்பாக, மான நஷ்ட வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா மீதும் புகார் கூறியிருந்தார் தனுஶ்ரீ. அவர் மீது பல பெண்கள் பாலியல் புகார் கொடுத்துள்ளனர். இருந்தும் பெரிய ஹீரோக்கள் அவரை ஏன் தங்கள் படங்களில் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கின்றனர் என்று கேட்டிருந்தார்.

அவர்களின் வெற்றி
நீங்கள் நடிக்க வரவில்லை என்றால் அது அந்த அரக்கர்களின் வெற்றியாக ஆகிவிடும்' என்று கூறியிருந்தனர். இதற்கிடையே, மீடு புகார் மூலம் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு 23 வருட சிறைத்தண்டனை கிடைத்துள்ளது. இந்நிலையில் நடிகை தனுஶ்ரீ கூறும்போது, 'இந்தி சினிமா எனக்குத் துரோகம் செய்துவிட்டது' என்று தெரிவித்துள்ளார்.

பாலிவுட் உதவவில்லை
இதுபற்றி அவர் கூறும்போது, நான் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கும்போது, சட்டரீதியான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவது அராஜகத்தின் அடுத்த நிலை. இந்த விவகாரத்தில் பாலிவுட் எனக்கு உதவவில்லை. எனக்கு நீதி கிடைப்பதற்குப் பதிலாக , வழக்குகளுக்குள் தள்ளப்பட்டுள்ளேன். நான் பலரால் கைவிடப்பட்டதை போல உணர்கிறேன். இதை நான் மறக்க மாட்டேன். நிச்சயமாக இதில் இருந்து மீண்டு வருவேன் என்று தெரிவித்துள்ளார்.