அப்போ ஆலியா பட்.. இப்போ பூஜா ஹெக்டேவா.. தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் மேக் ஓவர்.. ரசிகர்கள் கலாய்!

சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா.

இன்ஸ்டாகிராமில் படு ஹாட்டான போட்டோக்களை போட்டு ஏகப்பட்ட ஃபாலோயர்களை ஈர்த்த அவருக்கு மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் வெளியான ருத்ர தாண்டவம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அடுத்ததாக சன்னி லியோன் படத்தில் நடித்துள்ள தர்ஷா குப்தா சமீபத்தில் ஆலியா பட் போல மேக்கப் போட்டு போட்டோஷூட் நடத்தி இருந்தார்.

லோ பட்ஜெட் ஆலியா பட்

லோ பட்ஜெட் ஆலியா பட்

பாலிவுட்டின் முன்னணி நடிகை ஆலியா பட் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான கங்குபாய் கத்தியாவாடி திரைப்படம் 200 கோடி வசூலை ஈட்டி மிகப்பெரிய ஹிட் அடித்தது. பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி அந்த படத்தை இயக்கி இருந்தார். இந்நிலையில், கங்குபாய் கத்தியாவாடி கெட்டப்பில் நடிகை தர்ஷா குப்தா நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி டிரெண்டாகின. ஆலியா பட்டை விட அழகா இருக்கீங்க என்று பாராட்டுக்களும், லோ பட்ஜெட் ஆலியா பட் என ட்ரோல்களும் குவிந்தன.

இப்போ பூஜா ஹெக்டேவா

இப்போ பூஜா ஹெக்டேவா

இந்நிலையில், தற்போது அடுத்ததாக நிகழ்ச்சி ஒன்றுக்கு தான் எப்படி ரெடியாகி வந்திருக்கேன் என பாருங்க என செம க்யூட்டான வீடியோவை ஷேர் செய்துள்ளார் நடிகை தர்ஷா குப்தா. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அப்படியே பூஜா ஹெக்டே மாதிரியே இருக்கீங்க, இதுவும் மேக் ஓவரா என பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

செம க்யூட்

செம க்யூட்

காரில் இருந்து மேக்கப் ரூமுக்கு சென்று நிகழ்ச்சிக்காக அழகாக மேக்கப் போட்டு அம்சமாக இருக்கும் தர்ஷா குப்தாவின் அந்த லேட்டஸ்ட் ரீலை பார்த்த ரசிகர்கள் செம க்யூட்டாக இருக்கீங்க என ஹார்ட்டீன் எமோஜிக்களையும் ஃபயர் எமோஜிக்களையும் போட்டுத் தாக்கி வருகின்றனர். தாறுமாறாக கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்து வரும் தர்ஷா குப்தா அடிக்கடி இப்படி ரீல்களையும் போட்டு மயக்கி வருகிறார்.

அந்த படம் எப்போ வரும்

அந்த படம் எப்போ வரும்

சன்னி லியோன் உடன் தர்ஷா குப்தா இணைந்து நடித்துள்ள ஓ மை கோஸ்ட் திரைப்படம் சூட்டிங் நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே முடிந்த நிலையில், இன்னமும் அந்த படம் குறித்த எந்தவொரு அப்டேட்டும் வராத நிலையில், ஓ மை கோஸ்ட் எப்போதான் வரும் தர்ஷா என ரசிகர்கள் தொடர்ந்து டார்ச்சர் செய்து வருகின்றனர்.

அடுத்த படம் என்ன

அடுத்த படம் என்ன

ஓவியாவை போலவே நடிகர் யோகி பாபுவுடன் இணைந்து மெடிக்கல் மிராக்கிள் என்கிற படத்தில் கமிட் ஆகி உள்ளார் தர்ஷா குப்தா. இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் மன்சூர் அலி கான் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த ஆண்டு டிசம்பருக்கு மெடிக்கல் மிராக்கிள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X