»   »  காண்டம் விளம்பரத்திற்கு ரூ.2.5 கோடி வாங்கினாரா காஜல் அகர்வால்?

காண்டம் விளம்பரத்திற்கு ரூ.2.5 கோடி வாங்கினாரா காஜல் அகர்வால்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவில் பிஸியாக இருக்கும் நடிகைகள் விளம்பரத்தில் நடிக்க வருவது ஒன்றும் புதிய விசயமில்லை. சப்பாத்தி மாவு தொடங்கி சோப்பு, வாஷிங் பவுடர், செருப்பு, உள்ளாடை என எந்த விளம்பரம் என்றாலும் இன்றைக்கு தயங்காமல் நடிகைகள் நடிக்க ஒப்புக்கொள்கின்றனர்.

ஏனெனில் சிலமணிநேர கால்ஷீட்டிற்கு கோடிக்கணக்கில் வருமானம் வருகிறதே என்பதுதான். ஆனால் தமிழ், தெலுங்கில் கைவசம் ஒன்றிரண்டு படங்களை வைத்துள்ள காஜல் அகர்வால் இப்போது காண்டம் விளம்பரத்தில் கலக்கப் போகிறாராம். அதற்கு அவர் வாங்கியுள்ள சம்பளம்தான் பிற நடிகைகளின் காதுகளில் புகையை வரவழைத்துள்ளதாம்.

தமிழில் காஜல்

தமிழில் காஜல்

தமிழில் பழனி படத்தில் பரத்துடன் அறிமுகமாகி அதன்பின்னர் வாய்ப்பு இன்றி தெலுங்கு பக்கம் போனவர் காஜல் அகர்வால். மாவீரன் டப்பிங் படம் கை கொடுக்கவே மீண்டும் தமிழில் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானார்.

வாய்ப்பு வரலயே

வாய்ப்பு வரலயே

ஆனாலும் அவருக்கு இப்போது தமிழில் தனுஷின் மாரி படம்தான் உள்ளது. தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் நடித்து வருகிறார்.

விளம்பர படங்களில்

விளம்பர படங்களில்

தன்னுடைய சினிமா மார்க்கெட் வீக்காக உள்ளது என்பதை உணர்ந்த காஜல், விளம்பர படங்களில் தனது முழு கவனத்தை செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

கிளு கிளு விளம்பரம்

கிளு கிளு விளம்பரம்

காஜல் அகர்வால், ஒரு விளம்பரப்படத்திற்கு ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படும் நிலையில் தற்போது அவருக்கு ஒரு கிளுகிளுப்பான விளம்பர பட வாய்ப்பு தேடி வந்துள்ளது. அதுதான் காண்டம் விளம்பரம்.

ரூ.2.5 கோடி சம்பளம்

ரூ.2.5 கோடி சம்பளம்

பிரபல காண்டம் தயாரிப்பு நிறுவனம் காஜல் அகர்வாலிடம் விளம்பரப்படத்திற்காக அணுகியபோது ஒருசில கண்டிஷன்களோடு ரூ.2.5 கோடி சம்பளமும் கேட்டுள்ளாராம்.

நிபந்தனையோடு ஒப்புதல்

நிபந்தனையோடு ஒப்புதல்

கிளாமர் உடைகள், இரட்டை வர்த்த வசனங்கள் இன்றி விளம்பரம் இருக்கவேண்டும் என்ற நிபந்தனைகளோடு காஜல் அகர்வால் இந்த ஆணுறை விளம்பரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

கடை திறப்பு

கடை திறப்பு

அதுமட்டுமின்றி இவர் வணிக வளாகங்கள் திறப்பு மற்றும் நகைக் கடை, ஜவுளிக்கடை திறப்பு விழாக்களிலும் பெரும் தொகை வாங்கிக்கொண்டு கலந்து வருவதாக கூறப்படுகிறது.

காஜல் பெயரில் மோசடி

காஜல் பெயரில் மோசடி

ஹைதராபாத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு மிகப்பெரிய வணிக வளாகத்தை காஜல் அகர்வால் திறந்து வைக்க இருப்பதாக விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் காஜல் அகர்வால் அதிர்ச்சி அடைந்தார்.

என்னை கூப்பிடவில்லை

என்னை கூப்பிடவில்லை

அந்த வணிக வளாகத்தினர் திறப்பு விழாவிற்கு வருமாறு என்னிடம் தொடர்பு கொள்ளவில்லை என்றும், என்னுடைய அனுமதி பெறாமலேயே என் பெயரை பயன்படுத்தி விளம்பரப்படுத்தி வருகின்றனர் என்றும் கூறியதோடு, உடனடியாக அந்த விளம்பரத்தை அகற்றாவிட்டால் சட்டநடவடிக்கை எடுக்கபடும் என்றும் எச்சரித்துள்ளார். மேலும் இது நேர்மையற்ற செயல். கண்டிக்கத்தக்கது," என்றும் காஜல் தெரிவித்தார்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இது குறித்து சம்பந்தப்பட்ட வணிக வளாக நிர்வாகம் விளக்கமளித்தபோது, தங்களிடம் ஒரு விளம்பர நிறுவனம் காஜல் அகர்வாலை திறப்பு விழாவிற்கு அழைத்து வருவதாக வாக்கு கொடுத்து முன்தொகை பெற்றுள்ளதால்தான் தாங்கள் விளம்பரம் கொடுத்ததாகவும் இதுகுறித்து விசாரணை நடத்த தங்கள் நிறுவன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

சும்மா பிச்சுக்குதே

சும்மா பிச்சுக்குதே

எது எப்படியோ, காண்டம் விளம்பரமும், கடை திறப்பு விழா மோசடியும் காஜல் அகர்வாலுக்கு நல்ல பப்ளிசிட்டியை கொடுத்துள்ளதாம்.எதற்கும் ஒரு தில் வேண்டும் என்று நேர்மறையான விமர்சனமும், அதற்குள் இப்படி நடிக்கணுமா என்று எதிர்மறையான விமர்சனமும் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

English summary
As per reports Kajal demanded a whopping 2.5 crores and asked them to make the advertisement in decent manner rather than erotic.They reportedly assured that flavour of the ad is not raunchy or erotic but it is more message oriented.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil