»   »  தாரை தப்பட்டைக்காக ஒரு மாதம் கரகாட்டப் பயிற்சி எடுத்த வரலட்சுமி!

தாரை தப்பட்டைக்காக ஒரு மாதம் கரகாட்டப் பயிற்சி எடுத்த வரலட்சுமி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாலாவின் தாரை தப்பட்டையில் நாயகி வரலட்சுமி என்றதும் பலருக்கும் கொஞ்சம் ஷாக்தான்.

ஆனால் பாலாவாச்சே... நடிகர்களை சரியாக எடைபோட்டுதானே பாத்திரத்தையே தருவார். அப்படித்தான் வரலட்சுமிக்கும் இந்த வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

How Varalakshmi gets Tharai Thappattai chance

வரலட்சுமிக்கு பாலே உள்ளிட்ட நடனங்கள் அத்துப்படி என்றாலும், நாட்டுப்புற கரகாட்டம் கஷ்டமாகத்தான் இருந்ததாம்.

ஆனால் ஒரு மாதம் கடும் பயிற்சி எடுத்து அந்த கஷ்டத்தை நிவர்த்தி செய்து கொண்டாராம்.

பாலா படம், இளையராஜாவின் 1000வது படம் என்ற பெருமைகளுக்குரிய இந்தப் படத்தில் நடித்தது குறித்து என்ன சொல்கிறார் வரலட்சுமி?

"பாலா சார் ஒரு பல்கலைக் கழகம் என்பார்கள் பலரும். அது உண்மைதான். அவர் படம் ஒன்றில் நடித்துவிட்டால், இந்த தமிழ் சினிமாவில் வேறு எந்த இயக்குநர் படத்திலும் எளிதாக நடித்துவிட முடியும் என்பேன்.

இந்த படம் நடனம் சம்பந்தப்பட்டது. ஏற்கனவே நான் நடனம் பயின்று இருந்தாலும் 'தாரை தப்பட்டை' படத்தில் வரும் நடனம் தொடர்பாக ஒருமாத காலம் நடன பயிற்சி பெற்றேன். அதன் பிறகுதான் 'தாரை தப்பட்டை' படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது," என்றார்.

English summary
Actress Varalakshmi has took 1 month training in folk dance to get chance to play in Tharai Thappattai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil