»   »  ஷகிலா சுயசரிதையில் ரசிகர்களை கதிகலங்க வைக்கப்போகும் ஹூமா குரோஷி

ஷகிலா சுயசரிதையில் ரசிகர்களை கதிகலங்க வைக்கப்போகும் ஹூமா குரோஷி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஷகிலா கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை ஹூமா குரோஷி.

கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை டர்ட்டி பிக்சர்ஸ் என்று இந்தியில் எடுக்கப்பட்டபோது அதில் சில்க் ஸ்மிதாவாக நடித்தவர் வித்யாபாலன். இதற்காக தேசிய விருதும் வாங்கினார். தற்போது இன்னொரு கவர்ச்சி நடிகையான ஷகீலாவின் வாழ்க்கையும் திரைப்படமாக இருக்கிறது.

விளம்பர படங்களில் நடித்து, பிரபல மாடல் என்ற அந்தஸ்தை பெற்று, சினிமாவில் நுழைந்து இந்தியில் வேகமாக முன்னேறி வருபவர், நடிகை ஹூமா குரோஷி. இவர்தான் ஷகிலாவின் சுய சரிதை படத்தில் நடிக்கப் போகிறாராம்.

மலையாள பட உலகில் 1990 மற்றும் 2000-ம் ஆண்டுகளில் ஷகிலாவின் ஏகபோக கவர்ச்சி ராஜ்ஜியம்தான். கேரளத்து முதல் நிலை நாயகர்களான மம்முட்டியும் மோகன்லாலுமே போட்டி போட அஞ்சிய நடிகை இந்த ஷகிலா. இன்றைக்கு காமெடி, குணசித்திர நடிகையாகிவிட்டாலும் 90களில் ஷகிலா படத்திற்கு ரகசியமாக போனவர்கள் பலர் இருக்கத்தான் செய்கின்றனர்.

ஷகிலா சுயசரிதை

ஷகிலா சுயசரிதை

ஷகிலா எழுதிய சுயசரிதை புத்தகம் இந்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. ஷகிலா எழுதியுள்ள சுயசரிதையின் அடிப்படையில் சினிமா தயாராக இருக்கிறது. பிரபல கன்னட பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் இயக்குகிறார்.

4 மொழிகளில் ஷகிலா படம்

4 மொழிகளில் ஷகிலா படம்

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என 4 மொழிகளில் தயாராகிறது ஷகிலாவின் சுயசரிதை. இதில் ஷகிலாவாக நடிக்க நடிகை தேடி வந்தார்கள் தற்போது பிரபல இந்தி நடிகை ஹூமா குரோஷியை முடிவு செய்திருக்கிறார்கள்.

ஹூமா குரோஷி

ஹூமா குரோஷி

'கன்ஸ் ஆப் வஷேபூர்' படத்தில் அறிமுகமான ஹூமா அதன் பிறகு உபன்ஷந்த் கங்கா, டி.டே, பதல்பூர், ஹேவே, உள்பல பல படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார்.

நெருக்கமாக காட்சி

நெருக்கமாக காட்சி

நெருக்கமான காதல் காட்சிகளில் நடிக்கும்போது, பெண் என்பதால் நிச்சயம் அசௌகரியம் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் படத்தின் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டிய கட்டாயம் இருப்பதால் கடமையை செய்ய வேண்டியுள்ளது. அசவுகரியம் என்று கூறி, நிறைய‘டேக்' வாங்கிவிடக்கூடாது என்று ஒரு பேட்டியில் கூறிருந்தார் ஹூமா குரோஷி.

சம்மதித்த சகிலா

சம்மதித்த சகிலா

ஹூமா குரோஷி. தற்போது வொயிட், விசோரியஸ் ஹவுஸ், படங்களில் நடித்து வருகிறார். தனது வேடத்தில் ஹூமா நடிக்க ஷகிலா சம்மதித்திருப்பதாக கூறப்படுகிறது.

ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

அதிர்ஷ்டம் என்ற ஒன்று இல்லவே இல்லை. உழைப்பு மட்டும்தான் உண்மை. வெற்றி-தோல்வி எப்போது வரும் என்று சொல்ல முடியாது. நான் வெற்றியை நோக்கி உழைக்கிறேன். சோம்பேறிகள் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை என்று கூறியவர் ஹூமா குரோஷி. சினிமா ரசிகர்கள் ஷகிலாவாக இவரை ஏற்றுக்கொள்வார்களா பார்க்கலாம்.

English summary
The role of Silk Smitha won Vidhya Balan National Award for the movie, ‘Dirty Picture’. Another in the line is a bio-pic on glamour artist Shakila based on her auto-biography.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil