கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் நயன்தாரா!

By Mayura Akilan

நான் சைவத்துக்கு மாறிட்டேன் என்பதுபோலத்தான் நடிகைகள் சினிமாவில் கவர்ச்சி காட்டமாட்டேன் என்பதும். முதல் படத்தில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிக்கும் நடிகைகள் வெற்றிக்குப் பின்னர் கொடுக்கும் பேட்டிகளுக்கு அளவே இருக்காது. ஆனால் இத்தனைப் படங்கள் நடித்த பின்னர் இப்போது கவர்ச்சியாக நடிக்க தயக்கம் காட்டுகிறாராம் நயன்தாரா.

இரண்டரை கோடி சம்பளம் நோ

இரண்டரை கோடி சம்பளம் நோ

டர்ட்டி பிச்சரின் தமிழ் பதிப்பில் நடிப்பதற்காக நயன்தாராவிற்கு பேசப்பட்ட சம்பளம் இரண்டரை கோடியாம். தெலுங்கிலும் நயனிற்கு இருக்கும் வரவேற்பை பார்த்தே படத்தயாரிப்பாளர்கள் இந்த சம்பளத்தை தர முன் வந்திருக்கிறார் தயாரிப்பாளர் ஏக்தா கபூர். ஆனால் அதிக கவர்ச்சியும், ஓவர் நெருக்கமும் இனி நான் நடிக்கும் படங்களில் இருக்காது என்று கூறி நோ சொல்லிவிட்டாராம்.

காட்சிக்கு தேவையான கவர்ச்சி

காட்சிக்கு தேவையான கவர்ச்சி

எனக்கு கவர்ச்சி சரியாக இருக்காது.இருந்தாலும் படத்தில் எந்த அளவிற்கு கவர்ச்சி தேவையோ அந்த அளவிற்கு கவர்ச்சியாக நடிப்பேன் என்று கூறுவார்கள். பின்னர் வாய்ப்பிற்காக எந்த அளவிற்கு கவர்ச்சி தேவையோ அதை விட கூடுதலாகவே கவர்ச்சியாக நடிப்பார்கள். நயன்தாராவும் அப்படித்தான் பாவாடை தாவணி, புடவை என்று குடும்ப குத்துவிளக்காக தமிழ், மலையாளப்படங்களில் நடித்தார். பின்னர் தெலுங்கில் அதீத கவர்ச்சியில் களமிறங்கினார். கவர்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து தமிழ் படங்களிலும் பட்டையை கிளப்பினார்.

சீதாதேவியாக வாழ்ந்த நயன்தாரா

சீதாதேவியாக வாழ்ந்த நயன்தாரா

கவர்ச்சி தேவதையாக வலம் வந்த போதிலும் நயன்தாராவிற்கு காதலுக்கு பஞ்சமில்லை. பிரபுதேவா உடன் காதல் ஒருபுறம், சினிமாவில் கவர்ச்சியில் கலக்கல் மறுபுறம் என நடித்துக்கொண்டுதான் இருந்தார். இந்த சூழ்நிலையில் தெலுங்கு படத்தில் சீதையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு இடையே விரதமிருந்து சீதையாக நடித்தார். இதுதான் தனது கடைசிப்படம் என்று அறிவித்தார்.

படப்பிடிப்பில் அழுத நயன்தாரா

படப்பிடிப்பில் அழுத நயன்தாரா

திருமணத்திற்கு பிறகு நடிக்கக் கூடாது என்று முடிவு செய்திருந்த நயன்தாரா நல்ல கதாபாத்திரத்துடன் விலகிவிடலாம் என்று நினைத்து சீதா கதாபாத்திரத்துடன் திரை உலகிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாக கூறியிருந்தார். இதன் காரணமாக ராமராஜ்ஜியம் படப்பிடிப்பின் இறுதிநாளில் கண்ணீர் விட்டு அழுதாராம் நயன்தாரா.

மீண்டும் நடிக்க வந்த நயன்தாரா

மீண்டும் நடிக்க வந்த நயன்தாரா

பிரபுதேவா உடனான காதல் முறிவுக்குப் பின்னர் மீண்டும் நடிக்க வந்துள்ள நயன்தாரா ஒரு சில இயக்குநர்களுக்கு மட்டுமே கால்சீட் கொடுத்திருக்கிறார். தமிழில் அஜீத்துடன் நடித்து வருகிறார். இருந்தாலும் தமிழிலும் தெலுங்கிலும் இன்னமும் வரவேற்பு இருக்கிறது. இதனால்தான் ‘டர்ட்டி பிக்சர் படத்தில் எப்படியாகவது நயன்தாராவை நடிக்கவைக்க பலத்த சிபாரிசோடு சென்றிருக்கின்றனர் தயாரிப்பாளர்கள். அவர்களுக்கு நயன்தாரா சிம்பிளாக நோ சொல்லி அனுப்பிவிட்டாராம். இதுதான் கோலிவுட் உலகில் இன்றைக்கு ஆச்சரியமாக பேசப்படும் செய்தி.

இனிமேல் கவர்ச்சி கிடையாதா நயன்தாரா?

இனிமேல் கவர்ச்சி கிடையாதா நயன்தாரா?

சீதா கதாபாத்திரத்தில் நடித்த நயன்தாராவிற்கு ஆந்திர மாநில அரசின் நந்தி விருது கிடைத்துள்ளது. சீதா வாக நடித்த தன்னால் இனி அதிக கவர்ச்சியாக நடிக்க முடியுமா என்ற தயக்கமே தற்போது அவர் இரண்டரை கோடி சம்பளத்தை கூட மறுக்க காரணமாக அமைந்துவிட்டது என்கின்றனர் நயன்தாராவிற்கு நெருக்கமானவர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X