»   »  எனக்கு கூச்சம் ஜாஸ்தி... வெட்கப் புன்னகை பூக்கும் ஷ்ரத்தா கபூர்

எனக்கு கூச்சம் ஜாஸ்தி... வெட்கப் புன்னகை பூக்கும் ஷ்ரத்தா கபூர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: நடிப்பில்தான் நான் வெளிப்படையானவள். ஆனால் தனிப்பட்ட முறையில் நான் ரொம்ப ஷை டைப்.. கூச்ச சுபாவம் உடையவள் என்று கூறுகிறார் நடிகை ஷ்ரத்தா கபூர்.

26 வயதான ஷ்ரத்தா கபூர், அமிதாப் பச்சன் நடித்த தீன் பட்டி படத்தின் மூலம் அறிமுகமானவர். இப்படம் சரியாக ஓடவில்லை. ஆனால் 2 ஆண்டுகள் கழித்து வெளியான ஆஷிக்கி 2 படம் இவருக்குப் பெயர் வாங்கித் தந்தது.

அதில் இவருக்கும், நாயகன் ஆதித்யா ராய் கபூருக்கும் இடையே கெமிஸ்ட்ரி செமையாக இருந்ததாகவும் சிலாகித்துப் பேசப்பட்டது.

கூச்சமா இருக்கு

கூச்சமா இருக்கு

படத்தில்தான் போல்டாக நடிக்கிறார் ஷ்ரத்தா கபூர். உண்மையில், இவர் கூச்ச சுபாவம் ஜாஸ்தி கொண்டவராம். கூட்டமாக யாராவது பேச வந்தால் உடனே நடுங்கிப் போய் விடுவாராம். தனித்து இருக்கவே அதிகம் விரும்புவாராம். படத்தில் நடிப்பதாலும், புகழ் வெளிச்சம் பரவியிருப்பதும் தனது குணத்தை மாற்றவில்லை என்கிறார் ஷ்ரத்தா.

வெளிப்படையாக பேச மாட்டேன்

வெளிப்படையாக பேச மாட்டேன்

" நிஜத்தில் நான் ரொம்ப கூச்ச சுபாவம் கொண்ட பெண். எல்லோரிடமும் கலந்து பேசும் ஆள் அல்ல நான். எனது குடும்பத்தினர், மிக மிக நெருக்கமான தோழிகளிடம்தான் நான் மனம் விட்டுப் பேசுவேன்.

இப்பத்தான் பேச ஆரம்பிச்சிருக்கேன்

இப்பத்தான் பேச ஆரம்பிச்சிருக்கேன்

கடந்த சில ஆண்டுகளாக நான் அதிகமாக பேச ஆரம்பித்துள்ளேன். இருப்பினும் கூட தொடர்ந்து நான் ரிசர்வ்ட் பெண்ணாகத்தான் இருக்கிறேன். அதில் எந்த மாற்றமும் இன்னும் ஏற்படவில்லை.

மாறும், முடியலையே

மாறும், முடியலையே

நிறைய மாற வேண்டும் என நான் நினைப்பதுண்டு. வெளிப்படையாக பேச வேண்டும் என்று நினைப்பதுண்டு. ஆனால் இன்னும் முழுமையாக மாற முடியவில்லை. அதற்கு இன்னும் நாளாகும் என்று நினைக்கிறேன் என்றார் ஷ்ரத்தா.

திறமையைப் பாருங்க

திறமையைப் பாருங்க

ஏக் வில்லன் படத்தில் நடித்துள்ள ஷ்ரத்தா, தனது வேலை மற்றும் நடிப்புத் திறமையைப் பார்த்து பலரும் தன்னை அங்கீரித்திருப்பது தனக்குப் பெருமை தந்துள்ளதாக கூறியுள்ளார்.

English summary
She is known for portraying outgoing and expressive characters on-screen but actress Shraddha Kapoor says in real life she is a reserved person. The 26-year-old actress made lukewarm debut with Amitabh Bachchan starrer "Teen Patti" in 2010 but she got fame two years back with her stint as a budding singer in "Aashiqui 2", opposite rumoured boyfriend Aditya Roy Kapur.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil