»   »  த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா நாயகியின் அதிரடி முடிவு

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா நாயகியின் அதிரடி முடிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் இன்னொரு படத்தில் கண்டிப்பாக நடிக்க மாட்டேன் என்று நடிகை ஆனந்தி தெரிவித்திருக்கிறார்.

கயல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆனந்தி தொடர்ந்து சண்டிவீரன், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா மற்றும் விசாரணை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

I Am Surely not Again Work in Aadhik Ravichandran Movie - Aanandhi

இதில் ஜி.வி.பிரகாஷுடன் இவர் இணைந்து நடித்த த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா திரைப்படம் இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறியது.

விசாரணை திரைப்படம் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில் ஆனந்தி சமீபத்தில் அளித்த பேட்டியில் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து மீண்டும் பணியாற்ற மாட்டேன் என்று உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்.

அடல்ட்ஸ் காமெடி வகையைச் சேர்ந்த இப்படம் இளைஞர்களிடம் வரவேற்பைப் பெற்ற போதிலும், மற்றவர்களிடம் வரவேற்பை பெறத் தவறியது குறிப்பிடத்தக்கது.

English summary
Kayal Fame Actress Aanandhi says in Recent Interview "I Am Surely not Again Work in Aadhik Ravichandran's Movie".
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil