»   »  மேக்கப் இல்லாமல் இலியானாவை பார்த்தா சகிக்காது... சார்மி கிண்டல்!

மேக்கப் இல்லாமல் இலியானாவை பார்த்தா சகிக்காது... சார்மி கிண்டல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மேக்கப் இல்லாமல் இலியானாவை நேரில் பார்க்க சகிக்காது எனக் கூறி கிண்டலடித்துள்ளார் நடிகை சார்மி.

தமிழில் காதல் அழிவதில்லை படம் மூலம் சிம்பு ஜோடியாக அறிமுகமானவர் சார்மி. ஆஹா எத்தனை அழகு, லாடம் படங்களிலும் இவர் நடித்துள்ளார். ஜோதிகா போன்ற முகவெட்டு கொண்ட சார்மி, அவரைப் போன்ற சாயலில் நடித்த போதும் தொடர்ந்து தமிழ்ப் பட வாய்ப்புகள் இவருக்கு அமையவில்லை.

இதனால் தெலுங்குப் பக்கம் சென்ற சார்மி அங்கு முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருகிறார். இவருக்கும் நடிகை இலியானாவுக்கும் இடையே புதிய பட வாய்ப்புகளைப் பெறுவதில் பனிப்போர் நடந்து வருகிறது.

மேக்கப் இல்லாமல்...

மேக்கப் இல்லாமல்...

இந்நிலையில், தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றிற்கு சார்மி பேட்டியளித்துள்ளார். அதில், நீங்கள் இதுவரை எந்த நடிகையை மேக்கப் இல்லாமல் பார்த்தது இல்லை என அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

ப்ளீஸ் மேக்கப் போடுங்க...

ப்ளீஸ் மேக்கப் போடுங்க...

இதற்கு பதில் அளித்த சார்மி, ‘நான் இலியானாவை மேக்கப் போடாமல் பார்த்தது இல்லை. அப்படி யாராவது மேக்கப் இல்லாமல் அவரை பார்த்தால் உடனே அவரிடம் மேக்கப் பாக்சை எடுத்து கொடுத்து மேக்கப் போட்டு விட்டு வெளியே வாருங்கள் என்று சொல்லி விடுவார்கள் எனப் பதிலளித்துள்ளார்.

கிண்டல்... கோபம்

கிண்டல்... கோபம்

இதன் மூலம் மேக்கப் இல்லாமல் இலியானா அழகாக இருக்க மாட்டார் என சூசகமாக சார்மி கிண்டல் செய்துள்ளார். இதனைக் கேள்விப் பட்ட இலியானா சார்மி மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம்.

பதிலடி...

பதிலடி...

இதனால் விரைவில் இலியானா தரப்பில் இருந்து சார்மி குறித்து காரசாரமான அனல் பறக்கும் விமர்சனம் முன்வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

நண்பன்...

நண்பன்...

தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமான இலியானா, சமீபத்தில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Charmme has made some interesting comments on Ileana D'Cruz recently during a Telugu talk show. In what is seen as an off-the-cuff interview, when interviewer had asked Charmme that whom she can't see without make-up, Charmi named Ileana without any delay taking everyone by surprise.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil